உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

319

அவற்றுள் ஒழுக்கமாவது: பிராமணர், க்ஷத்திரியர், வைசியர்,. சூத்திரராகிய வேளாளர் என்னும் நான்கு வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என்னும் ஆச்சிரமங்களினின்று அவ்வவ்வாச் சிரமங்களுக்கு எடுத்து ஓதிய அறங்களிலே தவறாது ஒழுகுதல்.

வழக்காவது: ஒருபொருளைத்தனித்தனியே எனது எனது என்றிருப்பவர் அது காரணமாகத் தம்முள்ளே மாறுபட்டு அப் பொருளைப்பற்றி நியாயசபையிலே சொல்வது அதுகடன் கோடல், உபநிதி, கூடிமேம்படல், நல்கியதை நல்காமை, ஒப்பிப் பணி செய்யாமை, கூலிகொடாமை, உடையனல்லான் விற்றல், விற்றுக்கொடாமை, கொண்டுள்ள மொப்பாமை, கட்டுப்பாடு கடத்தல், நிலவழக்கு, மாதராடவர்தருமம், தாயபாகம், வன்செய்கை, சொற்கொடுமை, தண்டக்கொடுமை, சூது? ஒழிபு எனப் பதினெட்டுப் பதத்ததாம்.

தண் மாவது: அவ்வொழுக்கவழியிலும் வழக்கு

வழியிலும் வழுவினவரை அவ்வழியிலே நிறுத்துதற்பொருட்டு ஒப்பநாடி அக்குற்றத்திற்குத் தக்கபடி தண்டித்தலாம்.

இவற்றுள் வழக்கும் தண்டமும் உலகவழியிலே நிறுத்து வதேயன்றி, ஒழுக்கம் போல மக்களுயிர்க்கு உறுதியைத் தருஞ் சிறப்புடையனவல்ல வாகலானும், அவைதாம் நூலினாலன்றி உணர்வுமிகுதியானும் தேயவியற்கையானும் அறியப்படு தலானும் அவற்றை ஒழித்து இங்கே தெய்வப்புலமைத் திருவள்ளுவநாயனாராற் சிறப்புடைய ஒழுக்கமே அறமென எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்நாயனாருக்குத் திருவள்ளுவர் என்ற நாமம் சாதிபற்றி வந்ததன்று, திருவென்பது உயர்வையும், வள்ளுவரென்பது உண்மையையுடையரென்பதையும் விளக்கி நின்றன வாகலின், அது வேதத்தில் இலைமறைகாய்கள்போல் பலவிடங்களினும் மறைந்து வெளிப்படாதிருந்த மெய்ப்பொருள்களையெல்லாம் தொகுத்து உலகத்தாருக்குக்கொடுத்தருள்செய்தவரென்னுங் காரணம்பற்றிவந்த பெயராயிற்று. வள் - பகுதி, அர் விகுதி, உ- சாரியை, அப்பகுதிக்குப்பொருள், ஈகை.

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/344&oldid=1574770" இலிருந்து மீள்விக்கப்பட்டது