உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320

மறைமலையம் 8 – 8

அவ்வறந்தான் நால்வகை ஆச்சிரமங்களையுடையதாய் வருணந்தோறும் வேறுபாடுடைமையின் சிறுபான்மையாகிய அச்சிறப்பியல்புகளை ஒழித்து அனைவர்க்கும் ஒத்திருத்தலாற் பெரும்பான்மையாகிய பொதுவியல்புபற்றி இல்லறந் துறவறமென இருவகை நிலையாற் கூறப்பட்டது.

அவற்றுள் இல்லறமாவது இல்வாழ்க்கை நிலைக்குச் சொல்லுகின்ற வழியினின்று அவ்வில்வாழ்க்கைத் துணை யாகிய கற்புடைமனைவியோடுஞ் செய்யப்படுவதாகலின்,

காண்ட

இலக்கியம்

அவ்வில்லறத்தை முதலிற்சொல்லத்தொடங்கி எடுத்துக் இனிது முடித்தற்பொருட்டுச் சாத்துவிகம், இராஜசம், தாமசம் என்னும் முக்குணங்களாலே அறம் பொருள் இன்பமென்னும் மூன்றாகிய உறுதிப் பொருட்கு அக்குணங்களாலே மூவராகிய முதற்கடவுளரோடு சம்பந்தம் உண்டாயிருக்கையால் அம்மூன்று பொருளையுங் கூறலுற்ற நாயனார்க்கு அம்மூவரையும் வாழ்த்துதல் முறைமை யாதலின் அம்மூவர்க்கும் பொதுப்படக் கடவுள் வாழ்த்துக் கூறுகின்றார்.

1. வேளாளர் ஆரியநால்வகைவருணப் பாகுபாட்டின் கட்படுவா ரல்லரென்பது தமிழ்வரலாறுணவார் துணிபு;

முதலாவது கடவுள்வாழ்த்து உலகிற்கு முதல்வன் ஒருவனே

திராவிடம் ஆரியமுதலிய பாடைகளில் தந்ததாலோட்ட முதலிய விகாரவகையாற்பிறக்கும் எழுத்துக்களெல்லா வற்றிற்கும் நாதமாத்திரையாகிய இயல்பாற்பிறக்கும் அகர மாகிய முதல் ஒன்றேபோலச் செயற்கை யறிவினையுடையவை களாய்க் காணப்பட்டவுடம்புகளோடு கூடியவைகளாய் அநேகமாயுள்ள ஆன்மவர்க்கங்கட்கு இயற்கையறிவால் முற்றுமுணர்ந்து உணர்த்துதலையும், ஐசுவரியம், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்னும் ஆறுகுணங்களையு முடைய ய ஆதிபகவனாகிய காணப்படாத முதற்கடவுள் ஒருவனே உண்டு. இதற்கு உதாரணம்:- ஸ்ரீமத் -உமாபதி சிவாசாரியர் திருவருட்பயனில் அகரவுயிர்போ லறிவாகி யெங்கு - நிகரிலிறை நிற்க நிறைந்து” எனக் கூறியவாற்றால்

உணர்க.

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/345&oldid=1574771" இலிருந்து மீள்விக்கப்பட்டது