உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

321

இங்ஙனம், ஆதிபகவனாகிய முதற்கடவுளை எழுத்துக் களினிறைந் தவைதமக்கு முதலாய்நிற்கும் பொதுவியல்புபற்றி அகரத்தோடு ஒப்புக்கூறினும் அப்பரம்பொருள் ஞானரூபமாய் எங்ஙணு நிறைந்து எல்லாப்பொருள்களுக்கும் ஆதாரமாய் நிற்கு முழு முதற்கடவுளாதலின், உண்மையிற் றன்னுடைப் பொருளாகிய பசுபாசங்கள் ஒன்றனோடும் உவமிக்கப்படா னன்பதே நாயனாருக்குக் கருத்தென்பது அறிவிப்பார் அறிவாகி யெங்குநிகரிலிறை ற நிற்குநிறைந்து' தெளிவுபடுத்துக் கூறியருளினார்.

எனத்

ஐசுவரிய முதலிய ஆறுகுணங்களும் முதற்கடவுளுக்குரிய பகவநாமத்திற்கே யுரியனவென்பதற்குப் பிரமாணமென்னை யெனின், அவற்கு ஐசுவரியமுண்மைக்கு ஈசுவரபதச் சுருதியும், வீரிய முண்மைக்கு உக்கிரபதச்சுருதியும், புகழுண்மைக்குச் சிவபதச்சுருதியும், திருவுண்மைக்கு இருக்சங்கிதையும், ஞானமுண்மைக்குச் சருவஞ்ஞ சுருதியும், வைராக்கிய முண்மைக்குக் காமரிபுபதச்சுருதியும்; பிரமாணமாமென்க. திருவினாற்சிரேட்டர் திருவையெய்தும்பொருட்டுப் பரம சிவனது விசித்திரமான லிங்கந்தேவராற் பூசிக்கப்பட்டது என்று இவ்வாறு இருக்குவேதத் தோதப்பட்டது. அதர்வண வேதம் சிவநாமங்களுட் பகவனாமந் தலைப்பெய்தெடுத் தோதிற்று. சுவேதாச்சுவதரோபநிடதஞ் சிவபிரானைப் பகேசனென் றெடுத்தோதிற்று. இவ்வாறு ஓதியவாற்றால் பகவனாமப் பொருளாயுள்ளோன் பரமசிவனேயென்பது கடைப்பிடிக்க அரதத்தாசாரியரும் உமாபதிசிவாசாரியரும் சதுர்வேத தாற்பரிய சங்கிரகத்தினும் பவுட்கராகம விருத்தி யினும் இங்ஙனம் பகவப்பெயர் சிவபரமாதலை நன்குவிளக்கி யிட்டரு ளினார்கள்.

ம்

ஆ சாரிய சரணராகிய ஸ்ரீ அரதத்தசிவாசாரிய சுவாமிகள் திருவாய்மலர்ந்தருளிய சுருதிசூக்திமாலை யென்னும் சதுர்வேத தாற்பரிய சங்கிரக சுலோகங்களின் மொழி பெயர்ப்பு:-

அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் பகவனே மேலாமை சுவரியமே யோர்நிமித்தம் பற்றலின்றித் தகவனோய் திருவெலா ஞானமிகு வீரியமே தாவில்கீர்த்தி இகழுமவா வின்மையே யென்னுமறு குணங்களுமே பகநாமத்தாற்

புகறலாலவை நினக்குண்மையினீயே பகவனென்னுந் திருப்பேர்பூண்டாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/346&oldid=1574772" இலிருந்து மீள்விக்கப்பட்டது