உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322

  • மறைமலையம் லயம் – 8

புரப்பகைவ வற்றுளீசுரவுரையை சுவரியத்தைப்போதலில்லா உரப்பொருளை யுக்கிரனாமொருகிளவி சிவபதமொண்புகழைநன்கு தெருட்சருவக்கிய காமரிபு மொழிகண்முறையி னெலாந்தெரியுஞானம் பரப்பொருளின் வாவின்மைதமையமைய வுணர்த்துகின்ற பரமயோகீ. விருப்பமொழிந்துளநினக்குத் திருவினொருபயனுமிலை விளம்புசெல்வப் பெருக்கமுடைய யவனாகவிருக்கின்சங் கிதைகளினாற் பேசப்பெற்றாய் திருத்தவதி சயவடிவ நின்னதருட் குறித்தோற்றத் திருவையெய்த மருத்துவரா லருச்சிக்கப்பெற்றதெனச் சொற்றிடுமா மறைகண்மாதோ எனக்கூறிய வாற்றாலுணர்க.

ஆசிரியர் சிவஞான யோகிகள் இப்பெற்றியெல்லா மாராய்ந்து தெளிந்தன்றே "சீர்கொளிறை யொன்றுண்டத் தெய்வநீயென்றொப்பாற் -சோர்விலடையாற்றெளிந் தோஞ் சோமேசா" என்று முதுமொழி வெண்பாவில் எடுத்தோதி யருளி னாரென்க.

முதல்வனை வழிபடுதல்

இருக்குமுதலிய வேதங்கள் காமிகாதி ஆகமங்கள், சிக்ஷை, கற்பசூத்திரம், வியாகரணம், நிருத்தம், சந்தோவிசிதி, சோதிடம் என்னும் அறுவகை வேதாங்கங்கள், புராணம், நியாயநூல், மீமாஞ்சை, ஸ்மிருதி என்னும் நால்வகை உபாங்கங்கள், ஆயுள் வேதம், தநுர்வேதம், காந்தர்வவேதம், அருத்தநூல் என்னும் நால்வகை உபவேதங்கள், மற்றுங் கலைஞானங்கள் முதலிய எல்லா நூல்களையும் கற்றுணர்ந்தார்க்கு அக்கல்வியறி வென்னும் அபரவுணர்வாலாகும்பயன் மெய்யுணர்வினை

யுடை

ய அநாதி நித்தியமாயுள்ள அம்முதல்வனது பிறவிப் பிணிக்கு மருந்தாகிய நல்லதிருவடிக்கமலங்களை மனம் வாக்குக்காயங்களாகிய முக்கரணங்களாலும் பேரன்போடு வழிபட்டுப் பிறவியை அறுத்தலாம்:- இதற்கு உதாரணம்.

திருஞானசம்பந்தமூர்த்திநாயனார் தேவாரம்

கல்லார்நெஞ்சி, னில்லானீசன் சொல்லாதாரோ, டல்லோநாமே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/347&oldid=1574773" இலிருந்து மீள்விக்கப்பட்டது