உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328

மறைமலையம் -8

திருக்கோவையாருண்மைச் சிவநாயிகாவாதியார் ஸ்ரீமத்

காசிவாசி செந்திநாதையரவர்களுக்கு ஓர்கடா.

ஐயா,

தங்கள்

திருக்கோவையாருண்மை

விளக்கத்தில்

66

வதூவரபாவம் பேசப்படாத விடத்துத் திருவாசகத்துத் திருப்படையாட்சியிலே சிவபெருமான் நாயகராக அவருக்கு ஆன்மா நாயகியாகச்சொல்லப்படவில்லை” யென்று ஒரே

பிடியாகச்சாதிக்கின்றீர்கள்.

அப்படியானால் அத்திருப்படையாட்சியிலேதானே "சேலனகண்களவன் றிருமேனி திளைப்பனவாகாதே” என்றும், “என்னணியார் முலையாகமளைந்துடனின்புறுமாகாதே” என்றும்,

""

போந்த இவ்விரண்டு வாக்கியங்களையும் பார்த்தீர்களா? ல்லையா? இந்த இரண்டுவாக்கியங்களு மெந்தப்பாவத்தை யுணர்த்தவந்தன? வதூவரபாவத்தையன்றெனில் “சேலன கண்க ளென்றும் “திருமேனிதிளைத்தல்” என்றும் “என்னணியார் முலை” என்றும், “ஆகமளைதல்” என்றும் “உடனின்புறுத’ லென்றும் போந்தவிடயங்களுக்குக் கதிமற்றென்னை கொல்லோ? வதூவரபாவத்தையன்றெனில் இந்த இரண்டு வாக்கியங்களும் யார் கூற்றுச்சொல்லோ? இவ்வாக்கியங்கள் குறித்தபொருள் வதூவர பாவமாகும் விஷயத்தில், இவற்றையுட் கொண்ட அதேபதிகத்திற்றானே சிவனுக்கு நாயகசப்தம் பெறப்படுமெனில், அது வதூவரபாவத்தினாலே பெறப்பட்ட நாயகசப்தமென்றற் கண். அந்தோ! தங்களுக்கு நிகழ்ந்தவெறுப்பு என்னை கொல்லோ? சாகசர்ய நியாயத்தை இதில்வைத்துப் பாராத காரணம் என்னைகொல்லோ?

திருப்படையாட்சியிலே வதூவரபாவம் பேசப்பட்டது உண்டா? இல்லையா? என்றும், பேசப்படாத விடத்துச் சிவபெருமான் நாயகராகச் சொல்லப்பட்டது உண்டா? இல்லையா? என்றும், குதர்க்கதூஷணங்களின்றி உள்ளவாறு சால்வீர்களானால் தங்கள் சிவநாயிகாவாதத்தில் மேல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/353&oldid=1574779" இலிருந்து மீள்விக்கப்பட்டது