உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

329

விவகாரஞ்செய்ய யாந்தலைப்படுவோம். அன்றேல், விருதா காலக்ஷேபமெனக் கழித்துவிடுவோமென்க.

இங்ஙனம்,

ஸ்ரீமத் அம்பலவாண நாவலரவர்கள் மாணாக்கர், திருவாரூர் -சிவசூரிய மூர்த்தித்தேசிகர் ஞானசாகரப் பத்திராதிபரவர்கட்கு,

அன்புள்ள ஐயா,

சென்ற செப்டம்பர்மீ வெளிவந்த 'ஞானபோதினி' ப் ப் பத்திரிகையைப் படித்து வருங்கால் பத்திராதிபர் குறிப் பொன் றில் பின்வரும் விநோத உரையொன்றைக் கண்ணுற்றேன்.

சித்தாந்ததீபிகைப் பத்திரிகையின் மேமாதச் சஞ்சிகையிற் பாரிஸ்நகரத்துத் தமிழ்ப் புலவர் ஜூலியன் வின்ஸன் என்பவர் எழுதிய “சிலவிவாத விஷயங்கள்' என்றது மிக விநோதமாயிருக் கின்றது. அவற்றிற்கு விடை எழுதிய பண்டிதர் சவரிராய பிள்ளையவர்கள் கூற்று அதனினும் மிக விநோதமாயிருக் கின்றது" என்பதே. அப்பத்திராதிபர் விநோதம் விநோத மென்றாரே, என்னவிநோதத்தைக்கண்டார்? ஆழ்ந்தாய்ந்து கூறிய பண்டிதர வர்களின் அரியவிடயங்களோ அவர்க்கு விநோதமாயின! தமக்கு நுட்பவிஷயங்களின்மேல் ஆராய்ச்சி செல்லாவிடின் இவ்வாறு வெற்றுரை மொழிவதேன்? தங்கூற்றுக்குப் பிரமாணங்காட்டினார் அல்லர். பல்லோர்க்கும் பயன்படு மென்றுகருதிப், பத்திரிகாசிரியர் ஒரு விஷயத்தின் மேல் வலியுடைக்காரணத்தாற் றம்அபிப்பிராயத்தை வெளியிடுவர். இஃதுலகவழக்கம். அவ்வாறின்றி மொழியின் அஃதவர்க்கோர் இழுக்காம். அங்ஙனமாயின், ஞானபோதினிப் பத்திராதிபர் விநோதமென்று வெறும்போலியுரை மொழிந் திட்டதென்னை? அவ்வுரை அழுக்காறு கொண்டெழுந்ததோ அன்றோ என்ற ஐயப்பாடு எனக்குப்பெரிதும் உண்டாயிற்று. ஆகையால், ஷ பத்திராதிபர் தாங்கூறிய கூற்றுக்கேற்புடைய காரணங்காட்டி என்னையத்தை யறவேயொழிப்பாரென்று நம்புகின்றேன்.

மண்ணடி, சென்னை

21.10.02.

இங்ஙனம், நல்லதம்பி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/354&oldid=1574780" இலிருந்து மீள்விக்கப்பட்டது