உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330

  • மறைமலையம் - 8 8

(பத்திராதிபர் குறிப்பு:- நம் ஆப்தசிகாமணிகளான பண்டிதர் சவரிராயரவர்கள் மிக நுட்பமாக ஆய்ந்து சித்தாந்த தீபிகையின்கண் வெளியிட்ட அரியவிடயங்களின்மேல் நம்முடைய நண்பர்களான ஞானபோதினிப் பத்திரிகாசிரியர் மதிப்பின்றி யங்ஙனமெழுதியதற்கு நாமும் பரிகின்றாம்.

விடயத்தின் கண்

சவரிராயபிள்ளையவர்கள் தமக்குக் கருத்தொருப்பாடில்லையாயின், அந்நண்பர் அங்ஙனமொருப் படாமைக்கு வேண்டுங்காரணங்கள் நாட்டித் தங்கருத்தறி வித்தலே முறையாம். அம்முறை நடந்தங்ஙனமெழுதினால் அதனை அழுக்காறுபற்றி எழுந்ததெனவே உலகந்துணிந்திடும். அறிவுவிளக்கப் பத்திரிகாசிரியரும் இவ்வபிப்பிராயமே கொண்டெழுதினார். இனி நம் நண்பர் 'ஞானபோதினி' ப் பத்திரிகாசிரியர் அங்ஙனம் நடுநிலைதிறம்பி யுரையிட திருப்பாராகவென்னும் வேண்டுகோளுடையோம்.)

ஸர்வம்குஹமயம்ஜகத்

ா ா

பிறப்பிறப்பாதி, உயிர்க்குணமில்லாத ஸர்வதேவதாஸ் வாமியாகிய ஸ்ரீசுப்பிரமணியக்கடவுள் கிருபாகடாக்ஷத்தி னாலே ஸமஸ்த திவ்வியமங்களகுணகணாலங்கிருத வித்வசிரோ மணியும் சென்னைக்கிறிஸ்டியன்காலேஜ் தமிழ்ப்பண்டிதரு மாகிய மகா புருஷ செல்வச்சிரஞ்சீவி ஸ்ரீமந் - நா. வேதாசலம் பிள்ளை அவர்களுக்கு,

சிவஞானமும் தீர்க்காயுளுஞ் சிந்திதமனோரதசித்தியும் சந்தான சமர்த்தியும் அரோகதிடகாத்திரமும் ஐஸ்வரியா திக்கமும் தேவகுரு பிராமணப்பிரசாதமும் அபிவிருத்தியாகுக வென ஆசீர்வாதஞ் செய்து எழுதும் விஞ்ஞாபநம்.

தங்களுடைய நித்தியானந்தவைபவங்களை அடிக்கடி அறியவிரும்புகின்றேன்.

தங்களாலனுப்பப்பட்ட

திரு

வொற்றியூர் முருகர்மும்மணிக்கோவை” “சோமசுந்தரக் காஞ்சியாக்கம்’ என்னும் நூல்களிரண்டை வாசித்து ஆராய்ந்தேன். மும்மணிக்கோவையிலே அமைந்த சொற்களை யும் சொற்றொடர்களையும் பொருளையும் உற்றுநோக்கிய போது பத்துப்பாட்டு, சிந்தாமணி, சிலப்பதிகாரம், புறநானூறு முதலிய பழைய செந்தமிழ் நூல்களின் ஆக்கியோர்களே ஒருங்கு தங்கள்வடிவா அவதாரஞ் செய்தார்கள் போலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/355&oldid=1574781" இலிருந்து மீள்விக்கப்பட்டது