உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

331

என்று அநுமானஞ்செய்தேன். அதுமட்டோ! மேற்படி பிரபந்தத்தில் 41-ம் பக்கத்திலுள்ள “புலவராற்றுப்படை”யை நான் படித்துக் கொண்டிருக்கும்போது எனது சகபாடியாகிய பிரம்மஸ்ரீ, ச.சிவானந்த சுப்பிரமணியஐயர் கேட்டு இஃது க்காலத்துப் பாடலன்று சங்கத்தார்காலத்துப் பாடலேயா மென்று என்னுடன் வாதிட்டார். இப்புத்தகத்தை அவர் பெற்றுத் தங்கள் பெயரைப்பார்த்தபின்பே, உடன்பட்டுத் தங்கள் வித்வத் தன்மையைவியந்து மிகவும் பாராட்டினார். அவருக்கே அப்புத்தகத்தை உபகரித்துவிட்டேன்.

"சோமசுந்தரக்காஞ்சியாக்கம்" பூருவபக்ஷிகள் கூறிய அபவாதங்களையெல்லாம் பலிஷ்டப்பிரமாணங்கள்காட்டி, திக்காரஞ்செய்ய எழுந்ததேயாயினும் தொல்காப்பியம் முதலிய நூல்களிலுள்ள பொருணுட்பங்களைச் செவ்வனே யறிதற்கும் கையறியாமை நீங்குதற்கும் அப்பூர்வபக்ஷிகட்கும் ஏனை யோர்க்கும் மிகவுமுபயோகமாகுத லொருதலையாம். நிற்க.

தாங்கள் வெளியிட்ட "முனிமொழிப்பிரகாசிகை”யில் ஒரு பிரதி அனுப்பும்படி கேட்கின்றேன்.

இங்ஙனம்,

Pandit. ந.வே. கருகசபாபதி ஐயர். வைதிகசைவ உபந்நியாசகர்.

சிவபுராணப்பிரசாரகர்,

சைவவைஷ்ணவ கதாப்பிரசங்கி, நல்லூர் யாழ்ப்பாணம்.

கௌரவாபிமான சீலர்கட்குங் கையொப்ப நண்பர் கட்குஞ் செய்துகொள்ளும் பிரிய விண்ணப்பம்:-

கழிந்த புரட்டாசி ஐப்பசி மாதங்களில் அடுத்தடுத்து நேர்ந்த சுரநோயால் மிகவருந்தினோம். அச்சுரநோய் உடம்பில் நிரம்பக்கடுமையாகப்பற்றி உடம்பின் வளத்தை உரிஞ்சி வருகையிற் சுதேச மருத்துவ முறையில் மிகத் தேர்ச்சியடைந்து விளங்கும் நம் ஆப்தநண்பர் ஸ்ரீமத் குப்புசாமி முதலியாரவர்கள் நுட்பமாகப் பிரயோகித்த மருந்தின் வன்மையால் அது சிறிது சிறிதாகக் குறைந்தொழிந்தது. அஃதொழிந்தும், மூளையின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/356&oldid=1574782" இலிருந்து மீள்விக்கப்பட்டது