உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332

மறைமலையம் -8

சுறுசுறுப்பு மழுக்கமும் உறுப்புக்கள் இயக்கமின்மையுங் குறைந்தபாடில்லை. பின்னுமுண்ட மருந்தின் பெருமையாலுந் திருவருட்குறிப்பானும் மூளையின் சக்தியும் உறுப்புக்களின் யக்கமும் இப்போது பெருகிக்கொண்டே வருகின்றன. இங்ஙனந் தளர்ச்சியுற்றிருக்குங் காலங்களில் பத்திரிகையினை நடாத்துதற்குதவி செய்வாரில்லாமையால் இரண்டுமாதங்கட் குரிய இதழ்களிரண்டு முழுநெறி யவிழ்ந்தில. பின் இடை யிடையே நாம் அரிதின்முயன்று 9,10 இதழ்களிரண்டினையும் இப்போது நெறியவிழ்ந்து வெளிவிடுகின்றாம். இதுகாறும் நேர்ந்த தாமதத்தினைப் பொறுக்குமாறு அவர்களை வேண்டிக்

கொள்ளுகின்றோம்.

நம்முடைய ஞானசாகரத்தின் கண்ணே முதற்பதுமம் முளைத்தெழுந்து பத்து கடிதங்களும் பத்திழ்கள் விரித்தன. னை இரண்டிதழ்களையும் இன்னுமிரண்டு வாரத்துள் ரித்திடும். இவ்விதழ்களிற் பொறிக்கப்பட்ட விடயங்களின் அருமை பெருமைகளை நன்குணர்ந்தும் கையொப்ப நண்பர் சிலர் இன்னுந் தாந்தாஞ்செலுத்தல் வேண்டிய இரண்டு ரூபாவையுஞ் சலுத்தினாரில்லை. அங்ஙனமிருக்கும் நண்பர்கள் பத்திரிகையின் ஆக்கத்தைக்கோரி விரைவில் அதனை உபகரித்திடுவார்களென்று பிரார்த்திக்கின்றோம்.

ஏனைக்கையொப்ப நண்பர்களெல்லாரும், அடுத்த இரண்டாம் பதுமம் நன்கு முளைத்தெழுந்து ஏடவிழ்த்துச் சொற்பொருணயம் பொதுளியவிரைதெளித்து விளங்கு மாறுதத்தமக்குரிய கையொப்பத் தொகையினை உபகரித்திடுவார்களாகவென வேண்டுகின்றோம்.

முன்

இங்ஙனம்,

1. நாகப்பட்டினம் - வேதாசலம் பிள்ளை,

தமிழ்ப்பண்டிதர்,

சென்னைக் கிறிஸ்டியன் காலேஜ்.

1. கடிதங்கள் முதலாயின எழுதுவோரெல்லாரும் இந்த

முகவரிப்படியே அனுப்புதல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/357&oldid=1574783" இலிருந்து மீள்விக்கப்பட்டது