உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

337

வையங்கார், ஸ்ரீமது, அ-சண்முகம்பிள்ளை, ஸ்ரீமத், டி.நல்ல தம்பிப்பிள்ளை, ஸ்ரீமத்-சுப்பிரமணியபிள்ளை, ஸ்ரீமது-அ- சதாசிவதேசிகர் முதலான பெரியோர்க்கெல்லாம் நாம் வந்தனஞ் செய்கின்றோம்.

இனி இப்பதுமத்தின் இதழ்கள்சில உரியகாலத்தில் விரிந்தில. நமக்கு இடையிடையே நேர்ந்த பிணிகளானும் பிற அசௌகரியங்களானும் அங்ஙனந் தாமதம் நிகழ்ந்ததென்பதை அவ்வப்போது தெரிவித்திருக்கின்றோம். எம்போல்வார் இன்னோரன்ன அரியகருமங்களிற் புகுந்தால் எமக்குப்பின் நின்று உதவிசெய்வார் இச்செந்தமிழ்நாட்டில் மிக அரியர். எம்முடைய மனவுறுதியைக் குறைத்து அக்கருமத்தினைச் செய்ய வொட்டாமல் தடைசெய்து நிற்பார் மிகப்பலர். இவரால் நேர்ந்த இடையூறுகளை யெல்லாம் நீக்கித் திருவருட் சகாயத்தால் இம்முதற்பதுமம் முட்டின்றிவிரிந்தது.

இனி இரண்டாம்பதுமம், நம்முடைய கையொப்ப நண்பர்கள் தாந்தாம் செலுத்தற்கு உரியதொகையினை விரைவிற்செலுத்தினால் தானும்விரைய முளைத்தெழுந்து தன் செவ்விய இதழ்களைக் காலந்தோறும் தவறாமல் விரித்திடும். ஒரோவொரு சமயங்களில் இரண்டுமாதத்திற்குரிய இரண்டு இதழ்கள் ஒன்றாகவும் வெளிவரும். இது நிற்க.

இனி நம்முடைய கையொப்ப நண்பர்கள்சிலர் நம் பத்திரிகையின் உரைநடை கடினமாயிருக்கின்றதெனக் கூறு கின்றார்களாம். இச்செந்தமிழ்நாட்டில் தமிழ்க்கல்வி யுடை யோர் மிகச் சிலர்; இப்பத்திரிகையின்கண் எடுத்து எழுதப்படும் பொருள்களோ மிக அரியன; பொருளருமைக்கேற்ப அதனை விரித்துரைக்கும் உரைநடையும் அருமையுடையதாயிருக்கும். எல்லார்க்குஞ் சாமானியமாய்த் தெரிந்த பயனில் பொருள்களை எடுத்தெழுதினால் மக்கள் அறிவு விருத்தியாகாமையால், அவர் அறிவு விரிதற்கு ஏற்ற நுட்பமான பொருள்களைச் சிறந்த நடையில் எழுதிவருகின்றோம். இவற்றின் பயிற்சியால் அவர்க்கு அறிவுவிருத்தியாகும் என்பதில்சந்தேகமில்லை. அறிவுபெருகிப் பெருமையடைய வேண்டுமாயின் ஒவ்வொரு வரும் அரிய முயற்சிசெய்து தெரிந்தோரைக் கொண்டு நம் பத்திரிகையின் நாலைந்து இதழ்களைப் படித்துணர்ந்து கொள்வார்களாயின், அவர்க்கு மற்றை இதழ்கள் எல்லாம் எளிதிலே விளங்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/362&oldid=1574788" இலிருந்து மீள்விக்கப்பட்டது