உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338

மறைமலையம் லயம் – 8

இதுதான் செயற்பாலது. அரிய விடயங்கள் சிறந்தநடையிலெ ழுதப்பட்டு வெளிவருந் தமிழ்ப் பத்திரிகை. இச்செந்தமிழ் நாட்டில் நம்பத்திரிகையினைத்தவிர வேறில்லையென்பது கற்றறி வுடையோர்க்கெல்லாம் தெரிந்த தொன்றாம். சாமானிய பத்திரிகைகள் வேண்டுமாயின் நூற்றுக்கணக்காகப்பெறலாம்; அரியபத்திரிகை ஒன்றனை அங்ஙனம் பெறுதல்கூடாது. சாமானிய பத்திராதிபரெல்லாம் பொருள் சம்பாதிக்கும் முயற்சியில் தலைப்பட்டுச் சாதாரண சனங்கட்குத்தெரிந்த எளிய விடயங்களைப்பிரசுரித்துப் பொருள் ஈட்டுகின்றார். நாமோ அங்ஙனம் பொருளீட்டுந் தன்னயங்கருதாது தமிழ் மக்கட்கு அறிவு விருத்தியாக வேண்டுமென்னுங் குறிப்பால் இப் பத்திரிகையினைப் பிரகடனஞ்செய்து வருகின்றோம். இதனருமைஉணர்ந்து இப்பத்திரிகையினை எளியவிலைக்குப் பெற்று அறிவு விருத்திசெய்ய மாட்டாமல் சோம்பலுற்றக் கடினங் கடினமென்று சொல்லிவிடுவார்களாயின், அது நம்முடைய தமிழர்க்குப் பெருங்குற்றமாம். நாமும் இப் பத்திரிகையினைப் பிரசுரித்தற்கண் மனவெழுச்சியின்றி இதனை நிறுத்திவிட ஒருப்படுவோம். இது கிடக்க.

L

இனி இரண்டாம்பதுமம் முதற்கொண்டு நம்முடைய கையொப்ப நண்பர்கள் எளிதிற்படித்துணர்ந்து மகிழ்ச்சி யடைதற்குரிய இரண்டோர் விடயங்களைத் தொடர்ச்சியாக எழுதக்கருதியிருக்கின்றோம். அவை சாகுந்தலநாடக மொழி பெயர்ப்பும், ஒரு புதுக்கதையுமாம்.

(ப-பு) முன் அச்சிட்ட பிரதிகளெல்லாம் செலவழிந்தமை யானும் பலர் இதனைப் பின்னும் வேண்டும் வேண்டுமென அடுத்தடுத்துக் கேட்டலானும் ஈண்டிதனைப் பெயர்த்தும் பதிப்பிட நேர்ந்தாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/363&oldid=1574789" இலிருந்து மீள்விக்கப்பட்டது