உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344

-

மறைமலையம் - 8 – 8

எழுதவேண்டிற்று இல்லையாம். அவ்வாறின்றி அவருரை சூத்திரக்கருத்தோடு பெரிதும் மாறுபட்டுக் கிடத்தலினன்றே தாமவருரையினை ஆண்டாண்டு மறுத்து வேறுரையிடு வாராயினார்? அதுகிடக்க, சர்வமான்மசம்பு சிவாசாரியார் சித்தாந்தப் பிரகாசிகையில் “மாயாவாதநூல் செய்தவன் வியாதன்” என்று கூறுதலும், வடமொழி தென்மொழி மாப்பெருங்கடல் நிலைகண்ட ஆசிரியர்-சிவஞான யோகிகளும் அவ்வாறே திராவிடமாபாடியத்தின்கண் உரைத்தலும் என்னையெனின்:- நன்றுகடாயினாய், ஆண்டு மாயாவாதநூல் செய்தவன் வியாதனென்றதன்றி வேதாந்த சூத்திரம் L மாயாவாதம் போதிப்பதென்று அப்பெரியார் யாண்டும் ஓதாமையின் அவர்க்கது கருத்தன்றென்க. அது கருத்தாயின் ஆசிரியர் சிவஞானயோகிகள் "மறையினா லயனால் என்னுஞ் சித்தியார் செய்யுளுரையிலே “அவ் வேதத்தைக் கருமகாண்டம் ஞானகாண்ட மென்றிரு வகைப் படுத் தெடுத்துக்கொண்டு அதன்பொருளை நிச்சயித்து ரைக்கும் சாத்திரமாகிய பூருவமீமாஞ்சை உத்தரமீமாஞ்சை களையும்” என்னும் உரைக்கூற்றால் வேதத்தில் ஞானகாண்டப் பொருளைத் தெளித்துரைப்பது உத்தரமீமாஞ்சையெனப்படும் வேதாந்த சூத்திரமென்றலென்னையெனக் கடாவுவார்க்கு விடுக்கலாகா தென்பது. இனி அங்ஙனம் ஞானகாண்டப் பொருளை நிச்சயித்துரைக்கும் உத்தரமீமாஞ்சை மாயாவாதம் நுதலுவதென்றே கொள்ளற்பாற்றெனின், அவ்வேதத்தின் ஞானகாண்டமும் அப்பொருளே பயப்பதென்று கோடற்கு இடஞ்செய்யுமாகலானும், அங்ஙனங்கோடலும் ஆசிரியர்- சிவஞானயோகிகள்கருத்தோடு பெரிதுமுரணுவதாகலானும் அவ்வாறுசொல்லுதல் அடாதென்றொழிக. அல்லதூஉம், வேதவியாதர் வேதாந்தசூத்திரம் ஒன்றேசெய்தாராயின் 'மாயாவாதநூல் செய்தவன் வியாதன்' என்றன் மாத்திரை யானே அங்ஙனம் பொருள்கோடலாம். அவர் ஆன்மாக்கள் பரிபாகத் தின்பொருட்டு இதிகாசங்கள், புராணங்கள் முதலாகப் பலதிறப்படும் நூல்களியற்றினாராகலானும், அவற்றுள் இக்காலத்து வழக்கமின்றாய் இறந்துபட்டன பலவாதலானும் அங்ஙனந் துணிபொருள் கூறல் ஏதமாம்என

6

மறுக்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/369&oldid=1574795" இலிருந்து மீள்விக்கப்பட்டது