உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

343

அலைத்து ஈர்த்துப் பொருளுணர்த்தியும், சிலவற்றிற்குச் சொல்லும்பொருளும் மிக வருவித்துரைத்தும், சிலவற்றிற்குத் தாற்பரியங்கற்பித்தும், சிலவற்றிற்கு மாட்டுறுப்புப்பட

நிகழ்த்திச் சொற்களைத் துணித்தியைத்துப்

பொருள்

காண்டும், சிலவற்றிற்குக் கௌணப்பொருளுரைத்தும் இவ்வாறெல்லாம் சூத்திரங்களை நலிந்து பொருள்சொல்லிப் பெரிது மிடர்ப் பாடுறுவர். இங்ஙன மெல்லாமிடர்ப்பட்டும் முயற்சியளவு பயன் பெறுதலின்றி “மலைகல்வி யெலிபிடித்த வாறு போல ஜீவபரங்களை யபேதமென்று கூறி வாளா போயினார். இன்னும் சங்கராசிரியர் தமது பாடியத்தின் கண்ணே அபரேதுவாதிநா" எனமொழிந்து தாமுரைக்குஞ் சூத்திரவுரையோடு மாறுபடுமாசிரியர் பலருளரெனத் தாமே கிளந்துகூறுதலும், அவர்க்குப் பின் வேதாந்தசூத்திரவுரை கூறிய இராமாநுசர் தாமுரைப்பனவெல்லாம் முன்னை யுரையாசிரியரான “போதாயன தங்க திரமிட குகதேவ கபர்திந்

66

பருசி முதலியோர் வழிப்பட்டனவென்றலும், அம்

முன்னையுரையாசிரிய ருள்ளும்போதாயனர் சங்கராசிரியர்க்கு முன்னுரை கூறிய பூருவவாசிரிய ராதலால் அவருரைத்த வுரைவழியே யாமுரை எழுதுகின்றாம் எனஇராமாநுசர் பின்னும் வலியுறுத்தலும், அங்ஙனந் தொகுத்தோதப்பட்ட பழையவாசிரியன்மாருள் திராவிடர் எனப்படுவோர் எல்லாவாசிரியர்க்கும் பிராசீனராய் வேதாந்தசூத்திரவுரை கண்டருளிய தமிழ்முனிவராதலும் உணரும்வழிப் பின்னை யுரையாசிரியரான சங்கரருரைதான் வியாசசூத்திரக் கருத்தறி விக்கும் மெய்யுரையெனத்துணிபு காட்டுதல் நல்லறிவுமாட்சி யுடையார்க்குச் சிவணுவதன்றாம். முன்னே சொல்லப்பட்ட திராவிடரென்னும் பிராசீனவாசிரியர் வேதாந்தசூத்திரம் சைவசித்தாந்தப்பொருண் மெய்பெறக் கிளக்கும் அரியதோர் நூலாதல்கண்டு விழுப்பமுடைய மெய்யுரையதற்குரைத் தருளினாராக, அதற்கிணங்காது அவரோடும் பிறவாசிரியன் மாரோடும் பெரிதும் முரணித் தமக்குவேண்டியவாறே சூத்திரப்பொருளை நலிந்து புதுவதோருரை எழுதிய சங்கரர் மாட்டுவெகுட்சியு மிரக்கமுமுடையோராய் இராமாநுசர் முன்னையாசிரியரு ரைக்குப் பெரும்பான்மையும் பொருந்தத் தாமோர் நல்லுரை கண்டாரென்க. சங்கரருரை முன்னை யாசிரியருரைக் கிணங்குமாயின் இராமநுசர் தாமோர் புத்துரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/368&oldid=1574794" இலிருந்து மீள்விக்கப்பட்டது