உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346

-8

  • மறைமலையம் - 8

சங்கர

இங்ஙனமெல்லா நுணுகியாராய வல்லார்க்கு ஆசிரியர் சிவஞானயோகிகள் கருத்தினிது புலப்படுமாதலின், அவர் கருத்தறியாது கூறுவாருரை பற்றி ஈண்டைக்காவதோர் இழுக்கில்லை என்க. வேதாந்த சூத்திரத்தைச் பாடியத்தோடும் ஆங்கிலேயபாடையில் மொழி பெயர்த் துரைத்துப் பிரசித்தியுறும் தீபாவென்னும் ஆங்கில மகாவித்து வான் தமது முகவுரையில் சங்கரபாடியப் பொருள் வேதாந்த சூத்திரக்கருத்தோ டொருசிறிதும் இயையாமையை விரித்து விளக்கி, பின் அச்சூத்திரப் பொருளிவையென்று விடுப்பன வல்லாம் சித்தாந்தசைவப் பொருளோ டொற்றுமை யுறுதலுணரவல்லார்க்கு யாமீண்டு ரைப்பன வெல்லாம் வாய்மையேயாமென்பதினிதுவிளங்கும்.அல்லதூஉம், வேதாந்த சங்கரருரைப்பொருளோ

சூத்திரம்

66

டியைந்து,

சீவப்

பிரமவாதத்தைக் கிளந்தோதும் வழியதெனிற் றொடங்குழியே அதரதோப்ரஹ்மஜிஜ்ஞாஸா” என்றுரை யாமல் “அதாதோ ஜீவஜிஜ்ஞாஸா” என்று மயக்கறக்கூறும்; அங்ஙனமின்றிப் பிரமப்பொருளையே யாராய்வதாக வெழுந்தமையால், அது L மாயாவாதப் பொருளோ டொற்றுமை யுறுதல் யாண்டை தென்றொழிக.

வேதாந்தசூத்திரம் மாயவாதப்பொருளையே கருக் காண்டு கிடத்தலின், அந்நுணுக்கமுணர்ந்து மாயாவாதப் பொருளே பயப்ப உரையெழுதிய சங்கராசாரியரை அதுபற்றி மாயாவாதியெனவைத் தெள்ளுதலமையாதாமெனவும், பிருகற்பதி உலகாயதநூலும், சுக்கிரன்-மாயாவாதநூ லுமியற்றியவாறுபோலத் தாமும் ஓரோர்கோட்பாடுபற்றி யங்ஙனமுரையெழுதினாரெனவும், விபூதி, ருத்ராக்ஷதாரணம், பஞ்சாக்ஷர ஜபம், சிவபூஜை முதலிய அருஞ்சைவநெறிமேற் காண்டு சிவபுஜங்கம், சிவாநந்தலஹரி, சௌந்தரியலஹரி முதலிய பலவேறுவகைப்பட்ட சைவகிரந்தங்களியற்றிச் சைவசமயத்தை நிறீஇப் புறச்சமயநெறிகடிந்துவிளங்கும் சைவப்பெரியாரெனவும் உரையாமோவெனின்:- உரையா மன்றே. வியாழவெள்ளிகள் அங்ஙனம் உலகாயதநூலும், மாயாவாதநூலு மியற்றுதற்குக்காரணம் புராணங்களுரைப்பக் காண்டும். பிருகற்பதி யிந்திரன்பொருட்டும் சுக்கிரன் சூரன் முதலாயினார் பொருட்டும் அவ்வாறியற்றினர். சங்கராசாரியர் எவர் பொருட்டு யாதுகாரணம்பற்றி மாயாவாத பாடிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/371&oldid=1574797" இலிருந்து மீள்விக்கப்பட்டது