உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

347

மியற்றினாரெனக்கடாவுவார்க்கு இவர்பொருட்டு இக்காரணத் தான் இயற்றினாரெனக்கூறியிறுக்க லாகாமை யுணர்க. உலகை மயக்குதற்பொருட் டஃதியற்றினாரெனின், அதனை யொரு நூலாகத் தாமே யியற்றுவதல்லது, பிறிதொருவர் நூற்குரை யெழுதி அதனை யம்முகத்தான் விளக்குதல் பெரிதும் இழுக்குடைத்தாய் முடியுமென்பது, உயர்ந்தபொருளை யுயர்ந்ததோராற்றாற் றெரித்துணர்த்திய வேதவியாதரை மாயாவாதியெனவும், அவ்வுயர்ந்த நூற்பொருளை யிழிந்த தாகத்திரித்துணர்ந்து இழிந்ததோராற்றால் விளக்கிப் பெரியதோர் அபசாரஞ்செய்த சங்கராசாரியரைச் சித்தாந்த சைவரெனவும் மயங்கி முறைபிறழ்ந்துரைத்தல் நியாயமன்றாம்.

அற்றாயினும், சங்கராசிரியர் மாயாவாத பாடிய முரைத்தது பற்றி, அவரை மாயாவாதியாகத் துணிதல் அமையாதாம் பிறவெனின்:- நன்றுகடாயினாய், அவ்வுரைப் பொருளால் அவரை அம்மதவாதியாகத் துணியாதொழியின், வேறு அவர் தமது சித்தாந்தசைவமரபு தெற்றென விளங்க வெழுதிய நூல் யாதோவெனவும், அத்தகைய நூலொன்றுள் வழி அதனால் அவர் சித்தாந்தசைவரென்பது இ

-

னிது

ணியப்படுமன்றே யெனவுங் கடாநிகழ்ந்துழி அதனை விடுத்தல்வேண்டும். அங்ஙனம் விடுத்தற்குக் கருவியாய் அவராற்றனிமுதலாய் விரிவாகவாதல் சுருங்கவாத லெழுதப் பட்ட நூலொன்றின் மையின் அவரை யங்ஙனஞ் சித்தாந்த சைவரென்றலடா தென்றொழிக. அற்றேலஃதாக, இனிச் சிவ ஜங்க முதலிய சைவநலந்திகழும் அரியநூல் களியற்றினா ராலெனின்:- அதுவும் பொருந்தாமை காட்டுதும். அவர் அப்பெற்றியவாஞ் சைவகிரந்தங் களியற்றியவாறு போலவே, விஷ்ணு புஜங்கம் பஜகோவிந்தசுலோக முதலிய நூல்களு மியற்றி, மற்றிவ்விரு வகை நூல்களையும் விவகாரத்திற் சத்திய மெனக் கொண்டு, பரமார்த்தத்தில் மிச்சைப்பொருள் களாமென் றொழித்த லானும், அவர் வழியொழுகும் ஏனை மாயாவாதிகளும் விபூதிருத்திராக்ஷ பஞ்சாக்ஷர சிவபூஜாதி களையும், வெள்ளை மண் கோபீசந்தனம் துளசீகாஷ்ட தாரணம் அஷ்டாக்ஷரம் விஷ்ணுபூஜாதிகளையும் ஒத்து நோக்கி யனுட்டித்து, மற்றிவ்வனுட்டானத்தையும், பரமார்த்தத்திற் பொய்ப் பொருள்களாமென்று கழித்தலானும், சங்கராச் சாரியரைச் சைவரெனத் துணிவமென்பார்க்கு அஃதியாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/372&oldid=1574798" இலிருந்து மீள்விக்கப்பட்டது