உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348

மறைமலையம் லயம் – 8

இவ்விவ் வேதுக்களால் வைணவரெனத் துணிது மென்பாரை நீக்கா மறுதலைப்பொருளை யுடன் கொண்டு வரும் ஏதுப்போலியாய் முடிதலானும், அவர் பரம்பரையில் வருவாரெல்லாரும் மாயாவாதிகளாகவே யிருப்பக் காண்டலன்றி, வேறு பிறராகக் காணாமையானும் அவரைச் சைவரென்று கூறுதல் போலி யென்றொழிக. 'வெளுத்த தெல்லாம் பால், கறுத்ததெல்லாந் தண்ணீர்' என்றுணருந் தமக்கென வொன்றிலாரைப்போல், மாயாவாதிகளிடும்

புறவேடமாத்திரையான்மயங்கிச்

66

சங்கரா சாரியரைச்

சைவரெனக்கூற லுண்மைமுறைதிறம்பு முரையாம். மாயா வாதிகள் படிற்றொழுக்கத்தை நன்றுணர்ந்த எம்மாசிரியர் ஸ்ரீலஸ்ரீ நாயகரவர்கள் 'உத்தமவாத தூலவாதூல’த்தில் ஏசுவெனுஞ்சொல்லுமெழினான் மறைகூறு, மீசனெனுஞ் சொல்லு மினிதொன்றாப்-பேசவுனக்; கென்னோகெடுமதி தான்” என்றிழித்துக் கூறுதலானும் இவ்வுண்மை கடைப்பிடிக்க, அன்னோர்க்கு ஈசன் - விஷ்ணு - ஏசு - அல்லாவெனுஞ்சொற்கள் ஒரு பொருளவாமென்றுணர்க

இனி 'முனிமொழியும்' என்பதில் ‘முனி' என்னுஞ் சொல்லுக்கு 'வாதவூர்முனிவர்' என்று பொருள்கோடல் ஈண்டைக்கேலாதென்பதூஉஞ் சிறிதுகாட்டுதும். சொற்சுருங்கிய வாய்பாட்டானோதிப் பொருள்விளக்குவான்

புகுந்த

ஒளவையார் இயற்பெயரானும், அவ்வியற்பெயர்போலத் தாங்கருதிய பொருளை யினிதுவிளக்குஞ் சிறப்புப்பெயரானும் 'தேவர் குறள்' ‘நான்மறை' 'மூவர்தமிழ்' 'முனிமொழி' கோவைதிருவாசகம்' 'திருமூலர்சொல்' எனத் தெளிய வடுத்தோதினார். இவற்றுள், 'தேவர்குறள்’ ‘மூவர்தமிழ் என்னுந் தொகைகளில் 'தேவர்' 'மூவர்’ என்னும் அடை மொழிகள் வழக்குப்பயிற்சியாற் றிருவள்ளுவரையும், திருஞானசம்பந்த சுவாமிகள், திருநாவுக்கரசுசுவாமிகள், சுந்தரமூர்த்திசுவாமிகள் முதலாயி னோரையும் நிரலே குறித்து நின்றன. இனி, வாதவூரடிகளைப் பேராசிரியர் “திருவாதவூர் மகிழ் செழுமறை முனிவர்” என்று சுட்டியோதுதலின் அவரையே ஒளவையார் ‘முனி' என்றாரெனின்;- அற்றன்று, அருகியவழக்கா யாண்டேனு மோரிடத்து ஓரவசரம்பற்றி அச்சொல் அவ்வாறு பிரயோகிக்கப்படுவதன்றித் திருவாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/373&oldid=1574799" இலிருந்து மீள்விக்கப்பட்டது