உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

349

வூரடிகள், ஸ்ரீமந்-மாணிக்கவாசகசுவாமிகள் என்பனபோற் பரவைவழக்காய் நிகழ்வதின்மையானும், சிறப்புப்பெயராற் றாங்குறித்த பொருளைச் செறித்துவிளக்குவான் புகுந்த ஔவையார்க்கு அந்நியதிதப்பி யருகியசொல்லாற்கூறுத லிழுக்காய் முடிதலானுமென்பது. அல்லதூஉம் வாதவூரடி களுக்குமாத்திரம் ‘முனி’ என்னுஞ் சொல் வழங்குவதாயின், அங்ஙனம் பொருள்கோடல் சிறுபான்மைபொருந்தும். முலையமுத முண்டமுனி’ ‘வாகீசமுனி' ‘வன்றொண்டமுனி' என வேறு பிறர்க்கும் அப்பெயர் வேறுவேறு நூல்களில் வழங்கக் காண்டலின் அதுவுமமையாது. இதுவன்றியும், ஔவையார் எடுத்தோதிய இத்திருவெண்பாவில் ‘வேதவியாத முனிவ’ரைத் தவிர வேறு முனிவரிலர். அல்லதூஉம், திருவள்ளுவமுனிவர், சம்பந்தமுனிவர், திருநாவுக்கரசுமுனிவர்,

திருமூலமுனிவர் என்று சைவசித்தாந்திகள்

தம்முள்

வழங்குவதுஞ்செய்யார். அது தமது சம்பிரதாயநாமங்களோடு மாறுகொள்ளுமாதலின். அற்றேல், அப்பர்சுவாமிகளை ‘வாகீசமுனிவர்' என்று வழங்குதலென்னை யெனின், அஃதவர் பூர்வசன்மவிசேடம் பற்றி யவ்வாறு வழங்கப்படுவதாகலின் அவ்வாறு வினாதல் கடாவன்றென மறுக்க. இனி 'முனி' னி என்னுஞ்சொல்வழக்குச் சடகோபமுனி, மணவாளமாமுனி, வரவரமுனி, நாதமுனி முதலியவாக வைணவர் குழுவில் மிக்குநிகழக் காண்டலின், இச்சொல்லைத் திருவாதவூர்ப் பருமானிடமேற்றிக் கூறுதலாற்போந்த விசேடமென்னை யெனக் கடாவி மறுக்க.

சைவசமயிகள் வைணவப்பெரியோரை முனியென்றுகூற வொருப்படார். வைணவரும் சைவப்பெரியாரை 'முனிவர்’ என்று கூறார். பாரிசேடத்தாற் சைவரும், வைணவரும், மாயா வாதிகளும், பிறரும் வேதவியாசரை 'வேதவியாசமுனிவர்' என்றே வழங்குப. இங்ஙனம், முனியென்னுஞ் சொல்வழக்கு வாதவூரடிகளுக்குப் பெயராய்ப் பரவை வழக்கிற் பயிலக் காணாமையானும், அது வியாதருக்கே யவ்வழக்காய் நிகழ்வதானும் 'முனிமொழி' என்பதற்கு 'வாதவூர் முனிவர் சொல்' எனப்பொருளுரைப்பார் கூற்று வெறும்போலியே யாமென் றுணர்ந்துகொள்க. அல்லதூஉம், 'தேவர்குறள்’ மூவர் தமிழ்' 'திருமூலர்சொல்' என முன்னும்பின்னு மெல்லாம் செய்யுட்கிழமைக்கண் வந்த ஆறாம்வேற்றுமைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/374&oldid=1574800" இலிருந்து மீள்விக்கப்பட்டது