உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350

மறைமலையம் லயம் - 8

தாகைப்பட வுரைத்து ‘முனிமொழியுங் கோவைதிருவாசகம்' என்புழி மாத்திரம் பெயரெச்சத்தொடராக வைத்துக் கூறுதல் நியமமுறை பிறழ்ந்தொழிதலென்னும் வழூஉக்கிடனாய், இதனை எண்ணுப்பொருட்டாக வைத்தாரோ, பெயரெச்சப் பொருட்டாக வைத்தாரோவென்றையுறுதற் கேதுவாய் முடிதலி னங்ஙனங்கூறுதல் ஒருவாற்றானும் பொருந்தாதா மெனமறுக்க. செய்யுள் செய்வார்க்குத் தாங்கொண்ட நியமமுறை பிறழ்தல் வழுவாமென்பது ஆசிரியர் சிவஞானயோகிகள் ‘சூறாவளி' யிலாங்காங்குக் கூறுமாற்றானு முணர்க. அல்லதூஉம் 'தேவர்குறள்' 'மூவர்தமிழ்' 'திருமூலர் சொல்' என்புழி யெல்லாஞ் சொற்சுருங்கவுரைத்து, ஈண்டு மாத்திரம் ‘முனி மொழியும்' எனக்கூறுதல் ‘சொற்பல்குதல்' என்னுங் குற்றத்திற் கிடமாமாதலானும் அங்ஙனம் பொருள் கூறலாகாமை யுணர்க. அல்லதூஉம், நிரல்படக்கோத்தெண்ணிச் செல்லுநெறிக் கிடையே, ஒன்றனைப் பெயரெச்சமாக வைத்துரைத்தல் கட்டுரைச்சுவை குன்றுமாறு அஃகிய செவியுடையார்க்கெல்லா மினிதுபுலனாம். நன்றுசொன்னீர், “நீருநிலனு நிலம்பொதியு நெற்கட்டும்" என்புழி ஒளவையார் தாமே நீரும், நிலனும், நெற்கட்டும் என்றெண்ணிச் செல்லுதற்கண்

இடையே 'பொதியும்' என்பதனைப் பெயரெச்சமாக வைத்து நெற்கட்டை விசேடித்தல் தெற்றெனக்காண்டுமாகலின் அவர் எண்ணுநியமம் பிறழாரென நியதிகூறுதல் பொருத்தமின்றா மெனின்:- அதன் நுட்பந் தேறாது கடாயினாய், முன்னே சிலவற்றை நெறிப்பட வெண்ணிப் பின் தொகைகொடுத்து முடித்தலும், தொகை காடாமல் முன் சிலவற்றை எண்ணி வாளாதொழிதலுமென எண்ணுநியமமிரண்டாம். அவற்றுள் முன் எண்ணிப்பின் தொகை கொடுத்து முடிப்பதன்கண் இடையே பிளவுபடுத்து நியமம் பிறழ வேறுஉம்மைதலைப் பெய்து நல்லிசைப்புலவ நியாண்டுமோதார் பின் தொகை கொடாது கூறும் எண்ணும்மை வாக்கியத்தின்கண் அந்நியமம்பிறழ் தலாலிழுக் கில்லாமையின் வேண்டியவாறே வேறுவேறும்மையும் இடையிட்டுமொழிவர். இங்ஙனமே ஔவையார் ‘தேவர்குறள்' முதலியவற்றைநெறிப்பட வெண்ணிப்பின் ‘ஒரு வாசகம்' என்னுந்தொகைகொடுத்து முடி க்கின்றாராகலின் இடை டையே வேறும்மைதலைப்பெய்து கூறார்; 'நீருநிலனும் என்புழிப் பின்றொகுத்தோதுதலின்றி வாளாவெண்ணிப் போதலின் ஆண்டிடையே வேறுமமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/375&oldid=1574801" இலிருந்து மீள்விக்கப்பட்டது