உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

351

தலைப்பெய்தல்பற்றி நியமம் பிறழ்ந்தாரெனல் இல்லையாம். ஆகவே, அச்செய்யுளெண்ணு முறைபற்றித் 'தேவர்குறளும்' என்னுஞ் செய்யுளின்கண் யாங்கண்டு கூறிய நியமம் பிறழ்ந்து வழுவாமாறில்லை யென்றொழிக.

னி, சங்கரர் எழுதியபாடியவுரை, இவ்வுலகின்

சூத்திரத்திற்கியையாத்

பொய்ம்மையுணர்ந்து அதன்கண் வெறுப்பெய்தித் துறவற நெறியிற் சேறற்கேதுவாம் வலிவுதோன்ற நுட்பப்பொருள் தேற்றும் கடப்பாடுடையதாய் அஃதறிவுடையார்க்கெல்லாம் இன்றியமையாச் சிறப்பினையுடைய நிதியமாய்ப் பயன்படற் பாலதாகலின் அது வேதாந்த திரிபுரையென அங்ஙனம் வைத்திகழ்தலமையாதெனின் - நன்று சொன்னாய், பிரமத்தையொழித்தொழிந்தனவெல்லாம் பொய்யென்னும் அவருரைதேறுவார்க்கெல்லாம் தாமே பிரமமென்னும் உணர்வுதோன்றி அகங்காரமிகுதலானும், அவ்வகங்காரவுணர்வால் அவர் நல்லது தீயதுபகுத்துணர மாட்டாமல் தாம் வேண்டியவாறெல்லாம் உலகிற்கு இடர் பயப்பராதலானும் அவ்வாறு சொல்லுதல் பொருந்து மாறில்லை, இது கிடக்க.

னி ‘முனிமொழியும்' என்பதில் ‘மொழியும்' எனுஞ் சொல்லை நடுநிலைத்தீவகமாகவைத்து ஒவ்வொன்றோடுங் கூட்டியுரைத்துக் கோடற்பாற்றென்றலும் பொருந்தாமை காட்டுதும் ‘தேவர்மொழியுங் குறள்' ‘மூவர்மொழியுந்தமிழ்’ ‘திருமூலர்மொழியுஞ் சொல்' எனக்கூட்டியுரைத்தல்போலத் 'திருநான்மறைமுடிவு' என்புழியும் அவ்வாறு கூட்டிப் பொருளுரைத்தல் வேண்டும். அவ்வாறியைத்துப் பொருள் கோடலாகாமையின் 'மொழியும்' எனுஞ்சொல் ஆண்டு நின்று பொருள்வற்றும். அதுவேயுமன்றித் ‘திருமூலர்மொழியுஞ் சொல்' எனவுரைக்கும் வழி 'மொழியும்' என்பதுஞ் சொல்லும் என்னும்பொருளேபயப்பச் ‘சொல்' என்பதும் 'சொல்’ என்னும்பொருளேபயப்ப வாருபயனுமின்றி யாரு

பொருண்மே விரண்டுசொல்வந்தன வெனப்படுமாகலின் அதுவும் போலியாமென்றொழிக.

என்றித்துணையுங் கூறியவாற்றால், 'முனிமொழியும்' என்பதற்கு 'வேதாந்த சூத்திரம்' எனப் பொருளுரைத்தல் ஒளவையார் குறிப்பொடு படுத்துக் கொள்ளப்படுவதா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/376&oldid=1574802" இலிருந்து மீள்விக்கப்பட்டது