உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352

மறைமலையம் -8 8

மென்பதூஉம், ‘முனி' என்னுஞ் சொல்லுகீண்டு 'வேதவியாத முனிவர்' என்று கொள்வதேயன்றிப் பிறவாறு கூறுதல் வழூஉப்படுமென்பதூஉம், வேதாந்தசூத்திரம் மாயாவாதப் பொருளே போதிக்குமென்பார்க்கு உபநிடதமுதலிய வெல்லாக் கலைகளையும் அவ்வாறு கூறவேண்டுதலின் அது வெறுங் கூற்றேயாமென்பதூஉம், சங்கரர்வேதாந்தசூத்திரக் கருத்தறிந் துரையெழுதினாரென்றல் தொல்லைமரபு மாறுபாடா மென்பதூஉம், சங்கரர் சைவசித்தாந்தப் பெரியரென்றல் உலக வழக்கொடும் புலனெறிவழக்கொடும் மாறுகொள்ளுதலின் அதுகொள்ளற் பாற்றன்றென்பதூஉம், 'முனிமொழியும்' என்பதில், ‘முனி' என்னுஞ் சொல்லுக்கு ‘வாதவூர் முனிவர்’ எனவுரை விரித்தல் மூவகைப்பொருளில் ஒன்றுமாவான் சல்லாதென்பதூஉம், சங்கரர் பாடியபொருளுணர்ச்சி யுலகின்கண் உவர்ப்புணர்ச்சிதோன்றித் துறவறநெறியிற்சேறற் கேதுவாமென்றல் சைவசித்தாந்தப்பொருளொடு பிணங்கு மேனைச் சமயத்தார் கூறும் ஆரவாரவுரைகளாதலின் அவையீண்டைக்கேலாவென்பதூஉம், 'மொழியும்' என்ப தனை நடுவுநிலைத் தீவகமாகவைத்துப் பொருள்சொல்லுதல் ஏலாதென்பதூஉம் இனிது விளக்கப்பட்டனவென்க.

திருச்சிற்றம்பலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/377&oldid=1574803" இலிருந்து மீள்விக்கப்பட்டது