உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

354

மறைமலையம் 8 – 8

அதற்குப் பரிமேலழகியார் கூறுமுரைவருமாறு:- 'முன்றனியாக முட்டை தனித்துக்கிடப்ப அதனுள்ளிருந்த புள்ளுப் பருவம்வந்துழிப்பறந்து போனதன்மைத்து; உடம்பிற்கும் உயிர்க்குமுளதாய நட்பு தனித்தொழிய வென்ற தனான் முன்றனியாமை பெற்றாம்; அஃதாவது கருவுந்தானும் ஒன்றாய்ப்பிறந்து வேறாந்துணையும் அதற்காதாரமாய் நிற்றல்; அதனால் அஃது உடம்பிற் குவமையாயிற்று. அதனுள் வேற்றுமையின்றி நின்றே பின் புகாமற்போகலின் புள் உயிர்க்குவமையாயிற்று. முட்டையுட் பிறப்பன பிறவு முளவேனும் புள்ளையே கூறினார், பறந்து போதற் றொழிலான் உயிரோடொப்புமை யெய்துவது அதுவேயாகலின்.நட்பென்பது ஈண்டுக் குறிப்பு மொழியாய் நட்பின்றிப் போதலுணர்த்தி நின்றது. சேதனமாய் அருவாய் நித்தமாய் உயிரும், அசேனத மாய் உருவாய் அநித்தமாய் உடம்புந் தம்முண் மாறாகலின் வினைவயத்தாற் கூடியதல்லது நட்பில வென்பதறிக. இனிக்குடம்பை யென்பதற்குக் கூடென்றுரைப் பாருமுளர்.அது புள்ளுடன் றோன்றாமையானும், அதன்கண் அது மீண்டு புகுதலுடைமை யானும் உடம்பிற்கு உவமையாகா மையறிக’ என்பது.

பரிமேலழகியார் கூறுமிவ்வுரை நுட்பமுடைய தொன்றாயினும், திருவள்ளுவனார் கருத்தறிந்தெழுதப் UL ாமை யான் அஃதீண்டைக்கு ஒரு சிறிதும் இயையாது. குடம்பை என்னுஞ் சொல்லுக்கு முட்டையென்னும் பொருள் பரிமேலழகி யார் காலந்தொட்டு வழங்குவதாயிற்று. தொல்லாசிரியர் நூலுரைகளினெல்லாம் அச்சொற்பொருள் கூடு என்று வழங்குவதன்றி முட்டையென்பதில்லை; புறநானூற்றில், 'பறவைகளும் உயர்ந்த மரக்கிளையின்கணுள்ள கூடுகளி லிருந்து குரலொலி நிகழ்த்தின' என்று பொருள்படும் "புள்ளும், உயர்சினைக் குடம்பைக்குரறோற்றினவே" என்னும் அடியில் குடம்பை யென்னுஞ்சொல் கூடு என்று பொருள் தந்தவாறு காண்க.

அல்லதூஉம், பண்டைக்காலத்துத் தமிழாசிரியர் உலகியற்பொருள்களைத் தாமே ஆண்டாண்டுச் சென்று கண்டு, பின்கண்டாங்கு அவ்வியல்பு பொருந்த வமைத்துச் செய்யுள் பாடும் நல்லிசைப்புலமை மலிந்த தெள்ளியோராம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/379&oldid=1574805" இலிருந்து மீள்விக்கப்பட்டது