உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

355

பெற்றி காணுமிடத்து, அவர் இளமரக்காவினுங் கானற் பொழிலினும் முல்லை நிலக்காடுகளினுந் திரிதருங்கால் அங்குப் புட்களெல்லாந் தாம் வேண்டாப்பருவத்துக் கூண்டொழியப் பறந்து போதலைப் பன்முறையானுங் கண்டுவைத்து மற்றதனை உயிருடலொழியப் போதற்கு ஒப்புமையாகக் கடைப்பிடித்துக் கூறுவாராயினரென்னு முண்மை இனிது விளங்காநிற்கும்; இதுபற்றியன்றே நாலடியாரென்னும் பழந்தமிழ் நூலில் “சேக்கைமரனொழியச் சேணீங்கு புட்போல், யாக்கை தமர்க்கொழிய நீத்து” என்று சால்லப்பட்ட தூஉமென்க. பழம் நுகர்ந்து கோடுகளில் னிதுவைகியும், கவலையின்றித் தான் வேண்டுமிடந்திரிந்தும் பொழுது கழியா நிற்கும் புள் தான் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பருவம் வந்த துணையானே தான் ஒதுங்குதற்குக் கூடுமுடைந்து முட்டையிட்டு அடைகிடந்து குஞ்சு பொரித்து அவற்றை வளர்த்துப்போக்கித் தானும் அக்கூட்டை விட்டுப் போமாறுபோல, ஆணவ விருளின்கண் அறிவு மயங்கித் திரிதரும் உயிர் தானிருவினைப் போகநுகருதற்பொருட்டு இடையே வேண்டப்படுங் குடியில் அவ்வினை பரிபாகமாங் காறும்வைகிப் பின்பதனை விட்டுக் கழியும்.

இடையொருகாலத்து வேண்டுந்துணையும் ஒன்றில் வதிந்து பின் அதனை யொழித்தொழியும் அம்மாத்திரையே உவமைக்கும் பொருட்கும் உள்ள இன்பமாம்; என்ன? இது தொழிலுவமமாகலின் இங்ஙனங்கொள்ள லறியாது இதன்கண் வேறுவேறினியைபு காணுவான்சேறல் “ஆவிரம் பூப்பொன்னோ L ாக்குமென்றவழி அதுபோலடித்து நீட்ட வருமோ என்று வினாவுதல்" போல் நகையாடுதற் கேதுவாம். அற்றன்று, கூட்டைவிட்டுப் போன புள் மீண்டும் தன்கட் புகுதலுண்மை யால் அதன்கண் அத்தொழிலுவமங்கோடலா காதாமெனின்; அவ்வியல் பறிந்திலாய் புட்கள் எக்காலத்துங் கூடுகட்டு மாறில்லை; தாமடைகிடக்கும் பருவம் வருதலும் அது செய்து அது கழிந்ததுந் தாமுமக்கூட்டினை விட்டுப் போம்; அவை யங்ஙனம் அப்பருவக்கழிவில் அதனையறவே யொழித் தொழித்தலே ஈண்டைக்குவமையாயன்றி நாடோறும் அவை இரைதேடச்சேறலும் பெயர்த்து மதன்கட் புகுதலும் அல்லவாம். அதுவே யுவமையாமென்பதெற்றாற் பெறாது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/380&oldid=1574806" இலிருந்து மீள்விக்கப்பட்டது