உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

379

திருக்குறட் கத்தியரூபம்

இனியம்முதற்கடவுளது ஆணையினால், உலகமும் அதற்கு நன்மையாகிய அறம் பொருள் இன்பங்களும் நடத்தற்கு ஏதுவாகிய மழையினது சிறப்புக்கூறுகின்றார்.

2- வது வான்சிறப்பு

உலகம் நடத்தற்கு மழை ஏதுவாதல்

மழையானது இடை டைவிடாது நிற்க உயிர்கள் நீங்காமற் பிறப்பினை யுறுதல் பற்றி எந்நாளும் உடம்பொடு காணப்பட்டு வருதலால், அம்மழை உலகத்திற்குச் சாவாது நிலைபெறச் செய்கின்ற அமிழ்தமென்று அறியுந்தன்மையை உடையது.

உணவுகளை நுகர்கின்ற உயர்ந்த மாநுடர்க்கும் தாழ்ந்த மற்றை யுயிர்கட்கும் பசியைப்போக்கும் நன்மையாகிய அவ் வுணவுகளை உண்ட உண்டாக்கி, தானும் உண்ணப்படுவதாகிய தண்ணீராய் நீர்வேட்கையை நீக்கி உலகந்தழைத்தோங்கச் செய்வது மழை.

மழையானது பெய்யவேண்டுங்காலத்துப்பெய்யாது பொய்க்குமாயின்கடலாற் சூழப்பெற்றிருந்தும் அகன்ற வுலகத்தின்கண்ணே உணவின்மையினாலே பசிநிலை பெற்று நின்று வருத்த அதனாலே நோயுற்று உயிர்கள் இறக்கும்.

மழையென்னும் வருவாயினது பயன்குறையுமாயின் உழவர் உணவுக்குக் காரணமாக ஏரினாலே உழுதலைச் செய்யார்; பூமியின்கண்வாழும் மாநுடரை முயற்சி வேறு பாடுகள் பற்றி, பெய்யாது நின்று கெடுப்பதும், அவ்வாறு கட்டவர்க்குத் துணையாய்ப் பெய்து முன்கெடுத்தாற்போல் எடுப்பதும் இவையெல்லாம்வல்லது மழை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/404&oldid=1574830" இலிருந்து மீள்விக்கப்பட்டது