உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378

மறைமலையம் 8 – 8

யாராயுமிடத்து ஒருமொழி பிறிதொன்றற்குப்பிறப்பிடமாகா மையும், ஒருமொழி பிறிதொன்றுக்குத் தாயென்பார் கருத்து அவ்வொன்றுதானே பிற்காலத்துப் பலவாய் விரிந்தமரபு நோக்கி எழுந்தவாறும், அங்ஙனம் விரிந்த அப்பலவுந் தம்முளினமுடைய வாதலறியுமாறும் அங்ஙனம் நுணுகி யறியும்வழித் தமிழும் வடமொழியுந் தம்முள் ஒரு சிறிது மியையாமையும், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளுவு, எர்க்கலா முதலியன தம்முள் இயைபு பெரிதுடைய வாதலும், தம்முள் மறுதலைப் பட்ட இருமொழிகள் ஒன்றோடொன்று பிற்காலத்து விராவுமாறும், அங்ஙனம் விரவுதன் முறை யுணரும் வழி வடமொழியிற் புகுந்த தமிழ்ச்சொற்களும், அவற்றின் உற்பத்தியும் இனிது விளங்கல்

காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/403&oldid=1574829" இலிருந்து மீள்விக்கப்பட்டது