உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

377

பாவனையாயிருத்தலல்லது இயற்கைப்பொருளாகாமை யானும், வடமொழியில் அப்பொருளைக் குறிக்குந்தரளம் எனுஞ்சொற் காணப்படுதலானும் முத்தம் எனுந் தமிழ்ச் சொல்லையே வடநூலார் முக்தம் எனத் திரித்துக்கொண்ட ரென்க; முந்தி, முன்றானை; முயற்சி, மடிந்துகிடவாமல் முன்னேறிச் சென்று வினைநிகழ்த்தல்; முன், முன் இடம், காலம்; முனிவு, முன்றோன்றுவதான வெகுளி; முனை, முன்இடம், இனி இம் மு எனும் முதனிலை நீண்டு மூ என நின்றவழி அதினின்று மூக்கு, மூச்சு, மூடு, மூதாகை, மூப்பு, மூரி, மூலம், மூலை, மூழி, மூழை, மூளை முதலியன பிறக்கும். இவற்றுள், மூக்கு என்பது முன் நீண்டிருக்கும் உறுப்பு; மூச்சு, முன்தோன்றும் உயிர்ப்பு; மூடு, ஒன்றை முன்னே மறைத்து நிற்பது; மூதாதை, முன்றோன்றிய அப்பன்; மூப்பு, வயதினான்முன்னான தன்மை; மூரி, எருத்தின் முதுகிற் புடைத்து முன்றோன்றுந்திமில்; மூலம் பூண்டிற்கு நிலைக் களனாய் முன்றோன்றும் வேர் அல்லது கிழங்கு, இதனான் மூலம் என்பது வடசொலன்மையுமுணர்க; மூலை, இரண்டு சுவர் ஓடிக் குவியுங்கோணம்; மூழி, மூழை முற்சென்றுமுகக்கும் அகப்பை; மூளை, உயிர்நிலைக்கு இன்றியமையாதாய் முன் உள்ள முதற்பொருள். இங்ஙனம், இம் மு மூ என்னும் முதனிலை மு களை அசைத்து விகுதி முதலிய வற்றோடு பொருத்துதற் குபகாரமாய் இடையிலே வரும் ஒற்றுக்கள் அப்பகுதிப் பொருளே தம்பொருளாகப் பெற்று வருதல் காண்க. வாற்றால் முகம் என்பது தமிழ்ச்சொல்லே யாதலும், அதனைக் குறிப்பதற்கு வடமொழியில் ஆநநம், வதனம் முதலான பல சொற்கள் உண்மையுந் தெளிந்து கொள்க.

வ்

இன்னு மிவ்வாறே வடமொழியில் வழங்குந் தமிழ்ச் சொற்கட்கெல்லாம் உற்பத்திகண்டு கூறப்புகுந்தால் இவ்வுரை மிக விரிந்திடுமென அஞ்சி நிறுத்தினாம் வித்துவசிகாமணியான நம் ஆப்தர் ஸ்ரீமத், கார்த்திகேய முதலியாரவர்கள் விஷயத்தை விரிவாயெழுதுதலால் அவர்களெழுதுபவற்றுட்

பொருந்துவனவெல்லாங்கொள்க.

வ்

ஈண்டிதுகாறுங் கூறியவாற்றாற் சொற்கள் முதன்முதலுற் பத்தியாம் முறையும், அம்முறைதானும் உலகவியற்கையாய் நடைபெறுதலும், வ்வியற்கையினை யறிவொருங்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/402&oldid=1574828" இலிருந்து மீள்விக்கப்பட்டது