உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376

  • மறைமலையம் லயம் – 8

இனி, நாரங்கம் என்பது நல் என்னும் முதனிலையிற் றோன்றி நல்ல மணமுடைய நாரத்தையினை யுணர்த்தும். நன்மையினை உணர்த்தும் நல் என்னும் முதனிலையிற் பிறந்த சொற்கள் அளவிறந்தன. அவைகிடக்க, இந்நல் என்பது நாசிக்கினிமையினை உணர்த்துங்கால் நர் எனவும் நற் எனவுந் திரிந்து நல்ல மணத்தைக் குறிக்கும். நர் என்னும் பகுதியில் நரந்தம் என்பது தோன்றி நறிய மணத்தைச் சுட்டுதல் காண்க. னி நற் என்னும் பகுதியில் நறவு, நறுமை, நறை என்பன பிறந்து நன்மணமுடைய தேனினையும், நன்மணத்தையுங் காட்டும். இனி நர் எனும் பகுதி ஒரோவொருகால் நார் எனத் திரிந்து நாரங்கம், நாரத்தை, நாரி முதலியவற்றைப் பிறப்பிக்கும். இவற்றின் பொருள் நன்மணமுடைய ஒரு புதல், நன்மண ய முடையவேர்; கள் முதலியவாம். இனி நற் எனும் பகுதி நாற் என நீண்டு நாறல், நாறி முதலியவற்றைத் தோற்றுவிக்கும்; நாறல், மணத்தல், நாறி நன்மணமுள்ள கற்றாழை. இவ்வாற்றால், நாரங்கம் தமிழ்ச் சொல்லாமென்றே கடைப்பிடிக்க

இனி முகம் என்பது மு என்னும் முதனிலையிற்றோன்றிய தாம். மு என்னும் ஒலி தோன்றுங்கால் இதழ் குவிந்து முன் நீளுதலால் அவ்வியற்கைக் காரணம்பற்றி அம்முதனிலை முன் தோன்றுதலென்னும் புடைபெயர்ச்சி உணர்த்தும். இதன்கட் டோன்றுஞ் சொற்கள் வருமாறு:- முகதலை, முகப்பு, முகம், முகவை, முகனை, முகிழ், முகுளம், முகை, முகப்பு, முதன்மை, முதியர், முதிர்ச்சி, முத்தம், முந்தி, முயற்சி, முன், முனிவு, முனை முதலியன. இவற்றுள், முகதலை என்பது முன் நெய்யுஞ் சீரைத்தலை; முகப்பு, கலத்தை முன்னே செலுத்திமொள்ளல்; முகம், முன்றோன்றுவது; முகவை, முற்சென்று அள்ளும் அகப்பை; முகனை, யார்க்கும் முன்நிற்கும் முதன்மை; முகிழ்; முகுளம்; முகை, முன்றோன்றுகின்ற மலரரும்பு; முசுப்பு, எருத்தின் முதுகின்முன் புடைப்பாய்த் தோன்றுந் திமில்; முதன்மை, முதலாந்தன்மை, முதியர், அறிவால் வயதால் முன் நிற்போர்; முதிர்ச்சி, முற்றிமுதலாய் நிற்றல்; முத்தம், முதன்மைச் சிறப்புடையநித்திலம், இங்ஙனம் இதற்குப் பொருள் காணமாட்டாதார் இது முச் என்னும் வடமொழித்தாதுவிற் பிறந்து சிப்பியினின்று விடுபடுவது என்னும் பொருடரும் முக்தம் என்பதன்றிரிபு என்பர், அத்தாதுப்பொருள் மனோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/401&oldid=1574827" இலிருந்து மீள்விக்கப்பட்டது