உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

375

அஃதப்பெயர்த்தாயிற்று. ஆகாயத்தினும் நட்சத்திரங்கள் அங்ஙனமே பிரகாசிக்கக் காண்டலால் அவையும் வான்மீன் என உழக்கப்படுகின்றன. இம்முதனிலையினின்று லயினின்று மின்னல், மின்மினி, மினுக்கு, மீனாம்பூச்சி முதலிய சொற்கள் மிளிர்ந்த லென்னும் பொருள் கொண்டே வருதல்காண்க. மீனைச்சுட்டு வதற்கு மீன் என்னும் அவ்வொரு சொல்லையன்றி வேறுசொல் தமிழிற் காணப்படாமையானும், வடமொழியில் மற்சம் என்பது பெருவழக்காய் அப்பொருளைச் சுட்டிவருதலானும் அம் மீனம் என்னுஞ் சொல் தமிழேயாமென்க.

இனி, வளையம் எனுஞ் சால் வள் என்னும் முதனிலையிற் பிறந்ததொன்றாம். இம்முதனிலை வளைத லென்னும் புடைபெயர்ச்சியை யுணர்த்தும். இதிற்றோன்றுவன, வள்ளம் என்பது வட்டமாகவுள்ள கிண்ணத்தை உணர்த்தும்; வளவு வளைத்துக்கட்டப்படுங் கொல்லையினை உணர்த்தும்; வளாகம் சூழவுள்ள தினைப்புனத்தை உணர்த்தும்; வளார் வளைந்துள்ள சிறிய கொம்பினை உணர்த்தும்; வளையம் சூழவளைத்திடப்பட்ட பொற்கம்பியினை உணர்த்தும்; வளையல் மகளிர் கைக்கணியும் போத்தலோட்டை உணர்த்தும். வ்வள் என்னும் முதனிலை வழ் எனத்திரிந்து செம்மை மாறுபடுதலை உணர்த்தும் இதிற்றோன்றுஞ் சொற்கள்வழு வழுக்கு முதலியன; இவை குற்றம், தவறுதல் என்னும் பொருளைக்காட்டும். இன்னும், இவ்வள் என்னும் முதனிலை வட் எனத்திரிந்து வட்டகை, வட்டணை, வட்டம், வட்டிகை, வட்டில், வடு, வடை முதலியவற்றைப் பிறப்பிக்கும்; முறையே இவற்றின் பொருள் வட்டமான சிறு கிண்ணம், வட்டமா யுள்ளதாளம், வட்டவடிவம், வட்டமாயுள்ள உடை, வட்ட மான ஓர் உண்கலம், செம்மைதிரிந்தகுற்றம், வட்டமாகச் செய்யப்படும் உழுந்துணா என்பனவாம். இவ்வாற்றால் வருத்தம் வட்டம் எனத்திரிந்ததென்பார். கூற்றுப்போலியாதல்காண்க. இன்னும், இவ்வள் என்னும் முதனிலை வண் எனத்திரிந்து வண் சிறை, வண்டல், வண்டில், வண்டு, வண்ணம், வணக்கம், வணர் முதலியவற்றைத் தோற்றுவிக்கும். முறையே இவற்றின் பொருள் வளைத்துக் கட்டப்படும் மதில், சுழிந்துசெல்லும் நீர்ச்சுழல், உருள்களுடைய சகடம், வளையல், சுழிந்து சுழிந்து செல்லும் ஓசை, உடம்பின் வளைவு, வளைவு என்பனவாம். இவ்வாற்றால் வளையம் தமிழ்ச்சொல்லாதல் தெளியக்காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/400&oldid=1574826" இலிருந்து மீள்விக்கப்பட்டது