உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374

மறைமலையம் லயம் - 8

நின்று அப்பொருளே தருமாறு கண்டுகொள்க. இதனாற் பட்டினம் என்பது வடசொலன்மையும், அது தமிழ்ச் சொல்லாதலைத் தெரிக்கும் 'பட்டினப்பாலை' முதலான ஆன்றோர் பிரயோகமுண்மையுங்காண்க.

இனிப் பாகம் என்பது பக் என்னும் முதனிலையிற் பிறந்ததொன்றாம். இதழ் இரண்டும் பிளவுபடுங்கால் ஆண்டு இயற்கையிற் பிறக்கும் ஒலி பகரமாதலின் ப என்னும் முதனிலை பிரிதலென்னும் புடை பெயர்ச்சியை யுணர்த்தும் இம்முதனிலை யோடு ககரவொற்றுக் கூடி நின்று பக்கம், பக்கு, பங்கு, பகம், பகர்வு, பகல், பகிர்தல், பகுப்பு, பகை, பரிதல், பலகை முதலிய சொற்களைத் தோற்றுவிக்கும். இவற்றுள் பக்கம் இரண்டு கூறாக்கப்பட்டதனுள் ஒன்று; பக்கு, பிளவு, பங்கு, கூறு; பகம், இரண்டு பிளவாயு பிளவாயுள்ள குறி; குறி; பகர்வு, வாயைப்பிளந்து சொற்சொல்லவேண்டியிருத்தலாற் சொல்லல் என்பதனை உணர்த்தும்; பகல், ஞாயிற்றினாற் பகுக்கப்பட்டதினம்; பகிர்தல், கூறிடுதல், பகுப்பு, பிளப்பு; பகை, உறவோர் இருவர் தமக்குள் நேரும் பிரிவினைபற்றி நிகழ்வாதலால் விரோதம் என்னும் பொருளைத்தரும்; பரிதல், பிரிவு; பலகைவாளினாற் பகுக்கப் பட்ட மரத்துண்டு என்பது, இப்ப என்னும் முதனிலை பா என நீண்டு பாகம், பாகுபாடு, பாங்கு, பாதீடு, பாத்தி, பாத்து, பாதீடு,பாத்தி,பாத்து, பால்,பான்மை முதலியவற்றைப் பிறப்பிக்கும். இவற்றுள், பாகம் என்பது கூறிடப்பட்ட பொருளையும், பாகுபாடு கூறுபாட்டி னையும், பாங்கு கூறிடப்பட்ட நிலத்தினையும் பாதீடு பங்கிடுதலையும், பாத்தி சிறிது சிறிதாக வகுக்கப்பட்ட பயிர் நிலத்தையும், பாத்து விருந்தினர்க்குப் பகுத்துக் கொடுக்கப்பட்ட உணவினையும், பால் பகல் போல வெண்மையாயிருக்கும் பொருளையும் பகுத்திடப்பட்ட நிலத்தினையும், பான்மை பகுக்கப்படுந் தன்மையினையுங் குறிக்கும். இனி இப்ப என்னும் னி முதனிலை வ எனத் திரிந்து வகிர், வகை, வகுப்பு முதலிய சொற்களைத் தோற்றுவிக்கும். அவையெல்லாம் ஈண்டெடுத் துரைப்பிற் பெருகும். இவ்வாற்றாற் பாகம் என்பது தமிழ்ச்

சொல்லாதல்காண்க.

இனி மீனம் எனுஞ் சொல் மின் என்னும் பகுதியிற் றோன்றியதாம். கரிய கடலின்கண்ணே மீன் பிறழுங்கால் அதன் அகட்டிலுள்ள வெண்மை பளீரெனக்கட்புலனாதல்பற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/399&oldid=1574825" இலிருந்து மீள்விக்கப்பட்டது