உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

373

சாம்பல், சாய்வு, சாயல், சாயங்காலம், சார்பு, சாரணர், சாரர், சாரியை, சாழல், முதலியன. சாடுதல், சாயப்பண்ணுதல்; சாத்து, ஒன்றன்மேற் சார்த்தப்படுங்கோடணை; சாதல், நிலத்திற் சார்ந்துகிடத்தல், இறந்தார் எழுதலின்றி நிலத்தே கிடத்தலின் இப்பெயர்த்தாயிற்று; சாம்பல், தன்றன்மைதிரிந்து ஒடுங்குதல், தீயால் நீற்றப்பட்ட பொருள் தன்றன்மைதிரிந்து ஒடுங்குதலின் சாம்பலென்பது நீறு எனவும் பொருளுணர்த்தும்; சாய்வு, சாய்தல், சாயல், நிலத்திற்படும் நிழல் அல்லது நிறம்; சாயங்காலம், ஞாயிறு மேற்றிசையிற் சாயுங்காலம்; சார்பு, ஒன்றன்கட்சாய்தல், ஒன்றற்கு நிலைக்களம்; சாரணர், சாரர் பிறர் புரைசல்களை ஒன்றியிருந்து கேட்டு அறிந்துவந்துரைக்கும் வேவுகாரர்; சாரியை, ஓரெழுத்திற்குச் சார்பாய் வரும் பிறிதோரெழுத்து; சாழல், சாய்ந்தாடும் ஒருவகை மகளிர் விளையாட்டு இனிச் சா என்னும் முதனிலை குறுகிச் ச என நின்று சவம் என்பதனைப் பிறக்கும். இம்முதனிலை செ எனத் திரிந்து செத்தான் என்பதனைப் பிறப்பிக்கும். இவையெல்லாம் நுண்ணுணர்வாற் கண்டுகொள்க. இங்ஙனமாகலிற் சாயா, சவம் என்பன தமிழ்ச்சொற்களென்றே கொள்கவென்பது.

h

இனிப்பட்டினம் என்பது பண் என்னும் முதனிலையிற் பிறந்தது. பண் என்பது அறிவொருங்கித் திருந்தச்செய்தல் வினையை உணர்த்தும். பண்டம், பண்ணியம், பணம், பணி, பணை முதலிய பல அதன்கட்டோன்றும். அவற்றுள், பண்டம் என்பது அரிது செய்து முடிக்கப்பட்ட பொருளை உணர்த்தும். பண்ணியம் என்பது திருந்தச்செய்யப்பட்ட இனியதோர் அப்பத்தைக் குறிக்கும். பணம் முத்திரையிடப்பட்ட பொற் காசை உணர்த்தும். பணி முற்றச்செய்யப்பட்ட அணிகலத்தை உணர்த்தும். பணை எருவிட்டு உழுது வளம்படுத்தப்படும் வயல் நிலத்தைக்காட்டும். இனி இப்பண் என்னும் முதனிலை தகரவொற்றோடு புணர்ந்து பட் என நின்று பட்டினம் என்பதற்கு முதனிலையாம். பட்டினம் என்பது நாகரிக மிகுதியாற் றிருந்தச் செய்யப்பட்ட நகரத்தினை உணர்த்தும். “காடுகெடுத்து நாடாக்கி” என்பதனானும் இவ்வியல்புணர்ந்து கொள்க. இப்பகுதியிற் பிறந்து ஊரினைக் குறிப்பதான பட்டு என்னுஞ் சொல் ஆதனப்பட்டு, செங்கற்பட்டு, விருதுப்பட்டு, கொட்டாம்பட்டு எனப் பல தொடர்மொழிகளிலியைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/398&oldid=1574824" இலிருந்து மீள்விக்கப்பட்டது