உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

372

8

மறைமலையம் -8

உணர்த்தும். இக்குன் என்னும் முதனிலை கூன் என நீண்டு வளைவினை யுணர்த்தும்; அவ் வளைவினை யுடையோன் கூனன் எனவும் வளைவினை யுடையோள் கூனி எனவுஞ் சொல்லப்பட்டாரென்க. மேலே காட்டிய குட் என்னும் முதனிலை கூட் எனத் திரிந்து பல சொற்களையும், கொட் எனத் திரிந்து பல சொற்களையும், கோட் எனத் திரிந்து பல சொற்களையும் பிறப்பிக்கும். அவையெல்லாம் ஈண்டொருங்கே எடுத்துக்காட்டப் புகின் இவ்வுரை வரம்பின்றிப் பெருகுமாதலால், ஈண்டைக்கு வேண்டுவன மாத்திரையே எடுத்துக்காட்டுவாம். கோட் என்னும் முதனிலையிற் பிறந்து கோட்டை என்பது வளையக் கட்டப்பட்ட அரணினை உணர்த்துதலால் அச்சொல்லுந் தமிழ்ச்சொல்லாமென்பது தெளியற்பாற்றென்க. கோணம் என்னுஞ்சொல் குண் கோண் எனத் திரிந்த முதனிலையிற் பிறந்து வளைவினை உணர்த்தலால் அதுவுந் தமிழ்ச்சொல் லென்பது தேற்றமாம். இங்ஙனங் கோடுங் காம்பும் வளரும் இலையும் பூவுங் காயும் பழமும்போல் விரிந்த சொற்கட் கெல்லாந் தான் நிலைக்களனாய் அடிப்படையிற் கிடக்கும் அடிவேர்போல் நிற்பதான கு என்னும் முதனிலை முதலிற் குவிதலென்னும் இயற்கைப் பொருளையும், பின்னர் அதனோடொப்புமையுடைய உட்குழிதற்பொருளையும், பின்னர் உட்குழிதலோடொப்புமையுடைய வளைதற்பொருள் உட்டொளைப்பொருள் குறுகுதற் பொருள் முதலிய பிறவற்றை யுந் தந்து அவ்வச்சொற்பொருள்களோடு பெரிது மிணங்கி நிற்றலெல்லாம் நுணுகிய வுணர்வாற் கண்டுகொள்க. இவ்வாறேஅக் கு என்னும் முதனிலைக்குரிய இயற்கை ஒலிப் பொருட் காரணம் பொருந்தக்கொண்டு அதன்கட் பிறக்குஞ் சொற்கள் அளவிறந்தனவாம். அவையெல்லாம் சமயம் வாய்க்கும்போது தனித்தனிச் சொல்லாராய்ச்சியாகக் கொண்டு எடுத்து விளக்கிப் போதருங்கடப்பாடுடையோம். இது நிற்க.

கு

இனிச்சாயா, சவம் என்பன சா என்னும் முதனிலையிற் பிறந்தனவாம். இம்முதனிலைப்பொருள் ஒன்றிற் சார்த லென்னும் புடைபெயர்ச்சியாம். நிலத்திற் சார்தலாற் சாயா என்பது நிழலினை னை உணர்த்தும். சாயை என்னுந் தமிழ்ச் சொல்லினை வடநூலார் சாயாவெனத் திரித்தார். இம்முதனி லையிற் பிறக்குந் தமிழ்ச் சொற்கள் சாடுதல், சாத்து, சாதல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/397&oldid=1574823" இலிருந்து மீள்விக்கப்பட்டது