உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

371

குண்டம் ம் குணில் என்பன குவிந்த வடிவுடைமையாற் பானை, குறுந்தடி என்பவற்றை உணர்த்தும். பகரவொற்றோடு கூடிய குப் என்பதிற்பிறந்த குப்பி, குப்பை என்பன குவிந்தவாயுடைய போத்தலையும், குவிந்துகிடக்கும் அழுக்கின் குவியலையும் உணர்த்தும். மகரவொற்றோடு கூடிய கும் என்பதிற்பிறந்த கும்பம், குமிழ், குழிழி என்பன குவிந்த பாண்டத்தினையும், குவிந்த மலர் முகிழினையும், நீரிற்குவியும் மொக்குளினையும் உணர்த்தும். லகரவொற்றோடு கூடிய குல் என்பதிற்பிறந்த குலம், குலை என்பன ஓரினமாய்க்குவிந்த உறவினரையும், ஒருங்குசேர்ந்த காய், கனித்தொகுதியினையும் உணர்த்தும். வகரவொற்றோடு கூடிய குல் என்பதிற் பிறக்குங் குவடு என்பது குவிந்தமலை முகட்டினையும், குவவு குவிதற்றன்மையினையும், குவளை குவிந்த நீலோற்பலத்தையும், குவால் குவியலையும் உணர்த்தும். இனி ழகரவொற்றோடு கூடிய குழ் என்பதிற் பிறப்பவற்றின்

பொருள் வருமாறு:- குழல், குழாய் உட்டொளையுடைமையால் வேய்ங்குழலை உணர்த்தும் குழாம், குழுவு பல்பொருட்டொகுதியை உணர்த்தும். குழி உட்குழிந்திருத்தலால் அப்பெயர்த்தாயிற்று. குழிசி மேற்புடைப் புடைமையால் வயிறு பெரிய மிடாவினை உணர்த்தும். குழை திரண்டிருத்தலாற்குண்டலத்தை உணர்த்தும்; இதனாற் குண்டலம் என்பதும் இம்முதனிலைப்பொருளே தரக் காண்டலின் அதுவுந் தமிழ்ச் சொல்லாமென்றே துணியப்படும். இனிளகரவொற்றோடு கூடிய குள் என்பதிற்றோன்றிய குள்ளம் என்பது வடிவின் குறுமையினையும், என்பது உள்ளாழமுடைய விடத்தினையும் உணர்த்தும். இனி,

குளம்

றகரவொற்றோடு கூடிய குற் என்னும் முதனிலையிற்றோன்றிய சொற்பொருள் வருமாறு:- ஒருவர்க்குச் சிறுமையினைத் தருதலால் வழு வினைக் குற்றம் என்றும், ஆவுரிஞ்சு தறி குறிதா யிருத்தலாற் குற்றி என்றும், முறை முறையே குறுகிப் போதலால் தொடை குறங்கு என்றும், சிறுகியவடிவுடையது குறள் என்றும், சிறுகிய வோசையுடையது குறில் என்றும், குவிந்த மலைமேற்கட்டப் படுதலால் அரணிருக்கை குறும்பு என்றும், குறுகிக் குவிந்தது குறை என்றும் பெயருடைய வாயின. இனி னகரவொற்றோடு கூடிய குன் என்னும் பகுதியிலிருந்து பிறக்குங் குன்றம் என்பது குறுகிக் குவிந்த சிறுமலையினையும், குனிவு என்பதுவளைந்த விரிந்து குவிந்த வடிவத்தினையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/396&oldid=1574822" இலிருந்து மீள்விக்கப்பட்டது