உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370

மறைமலையம் -8

குடம்பை, குடா, குடி, குடில், குடுவை, குடை, குண்டம், குணில், குப்பை, கும்பம், குமிழி, குலம், குலை, குவடு, குவவு, குவளை, குவால், குவிவு, குழல், குழாம், குழாய், குழி, குழிகி, குழுவு, குழை, குள்ளம், குளம், குற்றம், குற்றி, குறங்கு, குறள், குறில், குறும்பு, குறை, குன்றம், குனிவு என்பன பிறக்கும். இங்ஙனம் இப் பகுதி யினின்று பிறக்குஞ் சொற்களின் வேறுபாடு தோற்றவித்தற் பொருட்டு க், ட், ண்,ம்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் முதலான ஒற்றெ ழுத்துக்கள் அம்முதனிலையோடு கூடித்தொகுதி தொகுதியாக மேற்கிளந்த சொற்களைப் பிறப்பிக்கு மியல்பினவாம். க் என்னும் ஒற்றொடுகூடிய குக் என்னும் முதனிலையிற் குகை என்பது தோன்றி உள்ளே குவிந்து செல்வது என்னும் பொருளை உணர்த்தும். இனிட் என்னும் ஒற்றோடு கூடியகுட் என்னும் முதனிலையிற் பிறந்த சொற்பொருள் கூறுவாம். நிலத்தின் உள்ளே குவிந்திருப்பதுபற்றிக் குட்டம் என்பது நிலவாழத்தை உணர்த்தும்; குவிந்த வடிவுடைமையால் குடம் என்பது பானையினை உணர்த்தும்; உடம்பைக் குவித்து வளைதலாற் குடந்தம் என்பது வணக்கத்தை உணர்த்தும்; உள்ளே குவியக் கட்டப்படுதலாற் குடம்பை என்பது கூட்டினை உணர்த்தும்; நிலத்திலொரு பக்கத்தை யறுத்துக் குவிந்துசெல்லுதலாற் குடா என்பது வளைந்த கடற்பாகத்தை உணர்த்தும்; உள்ளே குவிந்திருத்தலாற் குடி குடில் என்பன உறையுளை உணர்த்தும்; உட்குழிந்திருத்தலாற் குடுவை சிறு மட்கலத்தை உணர்த்தும்; குவிக்கப்படுதலாற் குடை கலிகையினை யுணர்த்தும். இவ்வாற்றாற் குடி, குடம் என்பன தமிழ்ச் சொற்களே யாதல் காண்க. இப்பெற்றி யினிதுணர்ந் தன்றே ஆசிரியர் சிவஞான யோகிகள் திராவிடமாபாடிய வுரையிற் குடம் என்பதனைத் தமிழ்ச் சொல்லெனக்கொண்டு ‘கு குடாகாயம்’ குளாம்பல் போன்மருவின தமிழ்நூன் முடிபாமென்று கட்டுரைத்ததூஉ மென்க. இந்நுட்பந்தேற மாட்டாதார் குடம் என்பதனை வடசொல் லெனக்கொண்டு உற்பத்திகூறமாட்டாமையிற் பெரிது மருள்வர்; அப்பொருளை யுணர்த்துங்கடம் என்னுஞ் சொல் வடமொழியிற் பெரிது வழங்கக்காண்ட லானும், குடம் என்பதவ்வாறன்றித் தமிழிற் பெருகியும்வடமொழியிலருகியும் நடைபெற லானும் அது தமிழியற்சொல்லேயாம் என்பது துணிபு. இது நிற்க. இனி, ணகரவொற்றோடுகூடிய குண் என்னும் முதனிலையிற் பிறந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/395&oldid=1574821" இலிருந்து மீள்விக்கப்பட்டது