உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

369

மை

கட் என்னும் முதனிலையாய்க் கடம், கடி, கடு, கடுகு, கடுப்பு, கடுமை முதலிய சொற்களைத் தோற்றுவிக்கும்; இவற்றுள், கடம் என்பது செல்லுதற்கு அரியநெறியினை யுணர்த்தும்; கடியென்பது கரிப்பு களிப்பு முதலிய பொருளை உணர்த்தும்; கடு என்பது காரமுடைய கடுக்காய், கைப்பானபொருள், கடுகுரோகணி முதலியவற்றை உணர்த்தும்; கடுகு என்பது காரமுள்ள ஐயவியினை யுணர்த்தும்; கடுப்பு காரமுடை யால் உடம்பின்கட்டோன்றும் ஒரு தொழிலினை யுணர்த்தும்; கடுமை யென்பது காரமுடைமையோடொப்புமையுடைய வன்குணத்தை உணர்த்தும். இம்முதனிலையினின்றே கடிகம், கடூரம் முதலான முதலான வடசொற்களுந் தோன்றுதல்காண்க. வ்வாற்றாற் ‘கடு' வென்னுஞ் சொல் தமிழிற்கே யுரித்தாதல் தெற்றெனப் புலப்படும்.

இனிக் கலா என்பது கல் என்னும் முதனிலையிற் பிறந்த தொன்றாம். இம்முதனிலை அறிவுகொள் என்னும் பொருளைத் தெரிக்கும். கல்வி, கல்லூரி, கற்பு, கழகம் முதலிய சொற்கள் அதிற்றோன்றியனவாம். இவற்றுள், கல்வி என்பது கற்கப் படுவது எனவும், கல்லூரி என்பது அறிவுதரப்படுமிடம் எனவும், கற்பு என்பது ஒருவன் விதித்த விதிவழியொழுகும் ஒழுக்கம் எனவும், கழகம் என்பது கலைபயிற்றப்படும் இடமெனவும் பொருள் குறிக்கும். இவற்றிற் கழகம் எனுஞ்சொல் களகம் என்றாய்ப் பின் களம் எனத்திரிந்து இடத்தினையுணர்த்தும். இவ்வாறு, கலா வென்னுஞ் சொல்லுக்கு வடமொழியிலுற்பத்தி கூறலாகாமையானும், அது தமிழ்ப்பகுபத வுறுப்புப்பெற்றுப் பொருந்த முடிதலானும் அது தமிழுக்கே யுரியதாம். கலை யென்னுந் தமிழ்ச்சொல்லையே கலா வெனத்திரித்து

வழங்கினார் வடநூல் வல்லாரென்றுணர்க.

னிக்குடி, குண்டம், குளம், கூனி, கோட்டை முதலியன கு என்னும் முதனிலையிற் பிறந்தன. இது குலிவு, கு என்னும் ஒலி இவற்றைக் காட்டும். மக்கள், இதழ்களைக் குவிக்குமிடத்துத் தோன்றுங் கூம்பலுருவத்தினையும், அங்ஙனங் குவித்துக்கூறும் வழிப் பிறக்கும் ஒலியினையும் இயற்கையாற் பலமுறை கண்டு வைத்து, அவ்வியற்கைக்காரணம்பற்றிப் பொருள்கட்குப் பெயர் கூறிவருகின்றார். குவிந்தவடிவத்தை உணர்த்தும் இக் கு என்னுமுதனிலையினின்று குகை, குட்டம், குடம், குடந்தம்,

க்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/394&oldid=1574820" இலிருந்து மீள்விக்கப்பட்டது