உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368

  • மறைமலையம் -8 8

நெருக்கி எரிப்பது, இரண்டுதரம் நெருக்கப்பட்ட அப்பம் என்பனவாம். ஒரோவொருகால் இம்முதனிலையின் பிறவினைப் பொருளை மறந்து அர்விகுதி கூட்டித்தன்வினைப் பொருள்பட அடர்தல் எனவும் வழங்குப; இஃதருகிய வழக்கமாதலானும் அட் என்னும்பகுதி பிறவினைப்பொருள்பட நிற்றலே பெருவரவின தாகலானும் இதற்குரிமையுடையது பிறவினைப் பொருளா மென்றே துணிக. இவ்வாற்றால் ஆணி, அடவி யென்னுஞ் சொற்கள், தமிழிற் பெருவரவிற்றாய் நடைபெறும் பிறந்து தமிழில் நடைபெறுதலானும், வடமொழியிலவற்றிற்கு இங்ஙனம் உற்பத்திகூறலாகாமை யானும், இவை தமிழோடினப்பட்ட எல்லாமொழி களினுங் காணக் கிடப்ப வடமொழியோ டினப்பட்டவற்றுட் காணப் படாமையானும் இவை தமிழுக்கே உரியனவாமென்க.

அள் என்னும் முதனிலையினின்று று

இனிக்கடு என்பது கள் என்னும் முதனிலையிற் பிறந்தது. தென்னை, பனை, ஈந்து முதலான மரங்களினின்று இறக்கப்படும் இரசம் கள் எனப்படும். இது காரமுடைய பொருளாதலால் து இம்முதனிலையினின்று பிறக்குஞ்சொற்களெல்லாம் அப் பொருண் மேலாகவே வருவனவாம். இதிற்பிறப்பன களர் களா களிமுதலியன; முறையே இவற்றின்பொருள் காரமான உவர்நிலம், உவர்ப்பான ஒருகனி, காரத்தினாலுண்டான மதர்ப்பு என்பன. இனி இக்கள் என்னும் முதனிலை வினையாய்ப் புடைபெயர்ச்சி உணர்த்துங்கால் பறித்தல் என்னும் பொருளுந்தரும்; இப்பொருட்பேறுள்ள சொற்கள் கள்வன் களைமுதலியன; கள்வன் பிறர்பொருளைப் பறிப்பவன்; களை பறிக்கப்படுவது, காரமுடைமை யுணர்த்துங் கள் என்னும் பெயரை வினைப்படுத்தும் பொருட்டு இ விகுதி புணர்ந்து இரண்டுங் களியென வேறோர் முதனிலையாய் நின்று களிப்பு, களித்தல் முதலான சொற்களைப் பிறப்பிக்கும். பறித்தற் பொருளை யுணர்த்துங் கள் எனும் வினைப்பகுதியோடு ஐ யென்னும் பகுதிப்பொருள் விகுதிபுணர இரண்டுங் களை என்னும் வேறோர் முதனிலையாய் நின்று களைதல் களைவு முதலிய சொற்களைப்பிறப்பிக்கும். இனிக் கள் என்னும் பெயர் னிக்கள் முதனிலையை வினைப்படுத்திக் காரமுடைமை என்னும் அதன்பொருளை மிகுதிப் படுத்துந் தகரவிகுதிபுணர இரண்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/393&oldid=1574819" இலிருந்து மீள்விக்கப்பட்டது