உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

367

நெருங்கு என்னும் பொருளை உணர்த்துவது, இப்பொருட் டாதல் “அள்ளூறித்தித்திக்கும்” என்னுந் திருவாக்கினும் ம் ஆசிரியர் நச்சினார்க்கினியர் சிந்தாமணியுரை யினுங்கண்டு காள்க. விரல்களை நெருக்கி நீர்முகத்தலால் அள்ளல் முகத்தலென்னும் பொருளும்உணர்த்தும்; இம்முகத்தற் பொருளும் அதன்கண் உண்மைபற்றிஅளவு வு அளன என்பனவும் அம்முதனிலையிற் பிறக்கும்; ஒருவரோடொருவர் நெருங்கிப்பழகுதலால் அளவுதல் அளாவுதல் என்பன கலத்தல் என்னும்பொருளை உணர்த்தி அதனினின்றே பிறந்தன; குறுகிய இட முடைத்தாதல் பற்றி அளை என்பதும் இம்முதனிலையில் தோன்றிற்று, இது து பற்றியே மிகக்குறுகிய இடத்தை "நெரிசலான இட டம் என்றுவழங்குப. ளகரம் ணகரமாகத் திரியுமியல் புடைமையால் அள் எனும் முதனிலை அண் என்றாய் அருகு என்னும் பாருளை உணர்த்தும்; இம்முதனிலையினின்று அண்ணல் என்பது உண்டாயிற்று. தன்பொருள் தன்னுடன் நெருங்கப் பிறந்தவன் என்றால் தன்னுடன் பிறந்தானென்பது, இவ் வண்ணல் எனுஞ்சொல் பிற்காலத்து லகரம் னகரமாய்த் திரிந்து அண்ணன்என வழங்குகின்றது; இன்னும் இம் முதனிலை யினின்று அணவுதல், அணில், அணு, அணை என்பன உண்டாம்; முறையே இவற்றின் பொருள் நெருங்குதல், மரக் கிளையில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஒரு விலங்கு, மிகச்சிறியது, நீரை நெருக்கித்தடைப்படுத்துவது அல்லது தழுவு தழுவப் படுவது என்பனவாம்; இவ் அண் என்னும் முதனிலை நீண்டு ஆண் என வாய்க்கருவிப் பொருளையுணர்த்தும் இவ்விகுதி புணர்ந்து ஆணி என நின்று மாத்தில் நெருங்கும் இரும்பினை உணர்த்தும். இனி, இவ் அள் என்னும் முதனிலை நெருங்கு என்னுந் தன்வினைப்பொருளை யுணர்த்துதலால் இதனைப் பிறவினைப் படுத்தும்பொருட்டுத் தகரவிகுதிபுணர அம் முதனிலை அட் என நின்று பிறவினைப் பொருளை உணர்த்தும்; இதிலிருந்து அடகு, அடல், அடலி, அடி, அடுக்கல், அடுப்பு, அடை, முதலியன பிறக்கும்; முறையே இவற்றின் பொருள் ஒருவனிடத்து ஈடாக நெருக்கப்பட்ட பொருள், பகைவனை நெருக்கிக்கொல்லல், மரங்களால் நெருக்கப்பட்ட காட்டிடம், நிலத்தொடு பொருத்தப்பட்ட உறுப்பு, ஒன்றொ டொன்று நெருக்கப்பட்ட பக்கமலை, தீயினை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/392&oldid=1574818" இலிருந்து மீள்விக்கப்பட்டது