உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366

மறைமலையம் -8 8

ஒரு

வடசொற்களேயாமென்றும், அவ்வடசொற்களையே தமிழர் எடுத்து வழங்கினாரென்றும் மொழிகளின் இயற்கையறியா துரைத்து ஏதம்படுகின்றார். அங்ஙனம் உரைப்பாருரை அறிவுநுண்மையின்றிப்போலியாதல் தெரிக்குமுகத்தான் வடமொழியிற்புகுந்த தமிழ்ச்சொற்களிற் சிலவற்றை ஈண்டுத் தந்துகாட்டி அவற்றிற் குற்பத்தி குற்பத்தி கூறுவாம். கூறுவாம். அவ்வாறு உற்பத்திகாண்பதற்கு உரிமையுடைய கருவிகள் கண்டாலல்லது. ருமொழியினும் ஒப்பவழங்கும் ஒரு சொல்லை மொழிக்கே உரியதெனக்கிளத்தல் நியாயவுரையாகாமையான் அக்கருவிகள் சில ஈண்டுக்குறித்திடுவாம். ஒருசொல் வடமொழியில் அருகிய வழக்கமுடையதாய்த் தோன்றித் தமிழிற் பெருகிய வழக்குற்று நிகழுமாயினும் அச்சொல்லு ணர்த்தும் பொருளைச் சுட்டுஞ்சொற்கள் வடமொழியிற் பலஇருப்பத் தமிழில் அப்பொருளையுணர்த்த அச்சொல் ஒன்றே வழங்குமாயினும், அச்சொல் வடமொழியோடினப் பட்ட பாஷைகளிற் காணப்படாதாகத் தமிழோடினப்பட்ட பாஷைகளில் அதுபெரிது காணப்படுமாயினும், சொல்லுக்கு வடமொழி வல்லார் கூறும் உற்பத்திப்பொருள் உலக வியற்கைக்கும் அறிவு நுட்பத்திற்கும் இயையாதொழியத் தமிழ் நூன்முறைப்படி சொல்லும் அப்பொருள் அவ் விரண்டிற்கும் மிகப் பொருந்துமாயினும், அச்சொல்லுக்கு வடநூலார் கூறும் முதனிலையிலிருந்து வடசொற்கள் பல தோன்றாவாகத் தமிழ் நூன்மரபிற்கேற்ப அதற்குச் சொல்லப் படும் முதனிலையினின்று பல தமிழ்ச்சொற்கள் தோன்றி நடைபெறுமாயினும், அச்சொற்பொருள் வட மொழியில் உவம உருவக இயைபான் வழங்கப்படுவதாகத் தமிழில் அம்முதனிலைப்பொருளே பொருந்தக்கொண்டு நிலவு மாயினும் அவ்வொருசொல் வடமொழிக்குரியதன்று மற்றுத் தமிழிற்கே உடைமையாமென்க.

அச்

னித்தமிழிலிருந்து வடமொழியிற்போய் நடைபெறுந் தமிழ்ச்சொற்கள் சில வருமாறு:- ஆணி, அடவி, கடு, கலா, குடி, குண்டம், கூனி, குளம், கோட்டை, சவம், சாயா, பட்டினம், பாகம், மீனம், வளையம், நாரங்கம், முகம் முதலியன.

இவற்றுள் ஆணி அடவி என்னுஞ்சொற்கள் அள் என்னும் முதனிலையிற் பிறந்தனவாம்; அள் என்னும் முதனிலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/391&oldid=1574817" இலிருந்து மீள்விக்கப்பட்டது