உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

365

நூலுரைகளில் அதன் சொற்கள் அருகி கி ரோவிடத்து வருதலும், அவர் மிக நெருங்கிய பிற்காலத்து அச்சொற்கள் மிக விராவுதலும் யாங்கூறும் உரையினை நிறுத்தும் பிரமாணங் களாம். அற்றேல் அஃதாக, வடமொழிச்சொற்கள் தமிழிற் பெருவரவினவாய்ப் புகுந்தவாறுபோலத் தமிழ்ச்சொற்களும் அதன்கட்புகுதாமை யென்னையெனின்:- பண்டே வடமொழி உலகவழக்கொழிந்து இறந்து பட்டமையால் பிற்காலத்து அதன்கட்டமிழ்ச் சொற்கள் புகுதற்கு இடம் பெறாவாயின், யாண்டும் உலகவழக்கொழியா இருமொழிகள் ஒருங்கு சேர்ந்தா லவற்றின் சொற்கள் தம்முள் விராவுதலல்லது, உலக வழக்கிறந்த சொற்கள் அங்ஙனம் விராவுதலில்லையாம். அற்றேல், வடமொழி யிறந்து பட்டமையின் அதன் சொற்கள் தமிழில் வந்து வந்து புகுதலென்னை யெனின்:- அறியாது கடாவுகின்றாய்; இறந்துபட்ட ஒருமொழி நெடுக ஒழுகாது ஓரிடத்து அமைந்து நிற்கும் நீர்நிலை போல்வதாம்; உலகவழக்குடையமொழி நீர்ப்பெருக்குற்று இனிது ஒழுகும் யாறு போல்வதாம்; யாற்று நீர் வறக்கும்வழி நீர்நிலையின் வரம்பை ஒரு புடையறுத்து யாற்றுக்கு நீரூட்டிப் பின் அவ்வரம்பைத்தடைசெய்தல் போல், உலகவழக்கின்கட் செல்லும் பாஷை காலத்திரிபுக்கும் நாகரிக வளர்ச்சிக்கும் ஏற்பச்சொற்கள் பெறும்பொருட்டு இறந் தொழிந்த பாஷைச் சொற்களைக் கையரிக்கொண்டு அவ்வாற்றாற் றான்பயப்பாடு பெரிதுடைத்தாய் இனிது நடை பெறாநிற்கும். இவ்வியல்பிற் கிணங்கவே உலகவழக்குடைய தமிழ் உலகவழக்கில்லா வடசொற்களைக் கொடுத்துத் திரித்துப் பயன்படுத்து அவ்வடமொழிக்கும் ஒருபெருமை தோற்றுவிக்கின்றது. இவ்வாறே ஆங்கிலபாஷை, இலத்தின் கிரேக்கு முதலான இறந்தொழிந்த பாஷைச்சொற்களை எடுத்துப் பயன் படுத்துதலும் இதனோடொத்து நோக்கற் பாலதாம். இவ்வியல் பறியவல்லார் வடசொற்கள் பிற் காலத்துத் தமிழிற் பெரிது புகுதல்பற்றி இழுக்கில்லை யென்பதுணர்வர் என்க.

ஃதிங்ஙனமிருப்ப, முன்னாளில் ஆரியர் தமிழரோ டொருங்குறைந்த காலத்துத் தமிழ்ச்சொற்கள் பல வடமொழி யிற் புகுந்து நடைபெறுவனவாயின. அவை தமிழ்ச் சொற் களென்று அறியமாட்டாது ஆரியபண்டிதர் சிலர், அவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/390&oldid=1574816" இலிருந்து மீள்விக்கப்பட்டது