உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364

– 8

  • மறைமலையம் 8

எடுத்துக்காட்டிய முதல் சொற்கள் இவ்விருவகை மொழியினும் ஒரு சிறிதும் இயைபுபடுதலின்றி வேறு வேறாக நிற்றல் இனிது காணப்படுதலின் இவை ஒன்றோடொன்று இனப்படும் பாஷைகளல்லவென்பது பிடிக்க, இனி. மேலே குறிப்பிட்ட L பத்துவகையான தமிழ் முந்துற்பத்திச் சொற்க ளெல்லாம் கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளுவு, குறும்ப, இருள், எர்க்கலர் ஏனாதி முதலான பாஷைகட்கெல்லாம் பொதுவாய் ஒரு பெற்றிப்பட நிற்றலின் அப்பாஷை தம்முள் ஒழுக்க முடைய ஒரு தொகுதியாமென்பதூஉம். இத்தொகுதி மொழியு மானு தொன்னாளில் ஒரு மொழியான தமிழ் மொழி யாயிருந்து பிற்காலத்து வேறு வேறு பிரிந்தனவா மென்பதூ இவ்வியைபு பற்றி உணர்ந்துகொள்க. இது நிற்க.

.

உம்

இனி, தமிழும் வடமொழியும் முதலுற்பத்திச் சொற்களிற் றம்முளியையாமை காண்டுமாயினும், வடமொழிச் சொற்கள் பல இஞ்ஞான்றைத் தமிழிற் பெரிதுகல்வி வழங்கலென்னை யெனின்:- வடநாடுகளில் இருந்து ஆரியர் அந்நாடுவிட்டுப் பெயர்ந்து தமிழ்நாட்டகத்தே குடிப்புகுந்தார். புகுதலும் விருந்தோம்பல்' வாழ்க்கையிற் சிறந்தோரான தமிழ் நன்மக்கள் அவரையேற்று அவரோ டொருமித்து வாழ்வாராயினார். அவ்வாறு ஒருமித்து வாழுநாளில் ஆரியர் வழங்கிய வட மொழிச் சொற்கள் தமிழினும், தமிழர் வழங்கிய செந்தமிழ்ச் சொற்கள் வடமொழியினுங்கலந்து நிலைபெறுவவாயின வென்க. இங்ஙனங்கலத்தல் உலகவியற்கையாம். இஞ் ஞான்றும், ஆங்கிலமக்கள் எம்மோடு விரய வாழ்தலால் கோப்பி விலில் போத்தல், புத்தான், தாலகிராமம், கோப்பை கோட்டு முதலான அவர் பாதைச் சொற்கள் தமிழினும் கட்டுமரம், தோப்பு, கஞ்சி, பஞ்சு முதலான தமிழ்ச்சொற்கள் ஆங்கிலத்தினும் நடைபெறு கின்றன. முன்னும் மொகலாயர் இந்நாடுகளை அரசாண்ட காலத்து அவர் சொற்களும் விராயின; துருக்தர் கொடுங்கோ லோச்சியபோதும் அவர்க்குரிய சொற்கள் அவ்வாறே கலந்தன; மகாராட்டிரர் அரசுபுரிந்த நாளினும் அங்ஙனமே அவர் சொற்களும் இங்கே இடை, நுழைந்து வழங்கின. ஆரியர் மிக நெருங்கிப்பழகாத பண்டைநாளில் எழுதப்பட்ட தமிழ் நூலுரைகளில் வட சொற்கள் காணப்படாமையும், அவர் சிறிது நெருங்கத் தொடங்கிய நாளில் எழுந்த தமிழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/389&oldid=1574815" இலிருந்து மீள்விக்கப்பட்டது