உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

363

யினமுடையவென்று கொள்ளுதற் கிடம்பெறாவாய் வேறு வேறு நிலையுமிலக்கணத் தவாமென்பது துணியப்படுமென்க. இது நிற்க.

-

இனிமேலே காட்டிய பரிசோதனையால் தமிழும் வடமொழியுந் தம்முள் ஒரு சிறிதும் இயையாத வேறு வேறு பாஷைகளாமென்பது நிறுத்தமுறையானெடுத்து விளக்கு வாம். முன்னர் அவ்விருமொழிகளின் இடப்பெயர்களை யாராய்வாம். தமிழில் நான், நாம் என்பன நன்மைப்பெயர். வடமொழியில் அகம், வயம் என்பன தன்மைப்பெயர். தமிழில் நீ நீர் என்பன முன்னிலை வடமொழியில் தவம், யூயம் என்பன முன்னிலை, தமிழில் அவன், அவள், அவர், அது, அவை என்பன படர்க்கை வடமொழியில் அஸௌ அமி அமூ: அத: அமுனி என்பன படர்க்கை; இவை வேறாதல்காண்க. னி முறைப்பெயர்கள் வருமாறு:- தமிழில் அம்மை அப்பன் வடமொழியில் மாதா, பிதா, தமிழ் பிள்ளை வடமொழி சுக, பால; தமிழ் கணவன் மனைவி, வடமொழி, பதி; வல்லபபார்யா; தமிழ் அண்ணன் தம்பி வடமொழி அக்ரஜா ப்ராதா; தமிழ் அக்கை தங்கை, வடமொழி ஸவஸா இவை வேறாயின; பின்னர் உணவுப்பெயர்:- தமிழ் காய், கனி; வடமொழி சலாடு பலம், தமிழ் நீர் பால் தேன் வடமொழி ஜலம் பயஸ் மது; இவையும்வேறாதல்காண்க. இனி, எண்ணுப்பெயர்:- தமிழ் ஒன்று, இரண்டு, மூன்று, வடமொழி ஏகம், த்விதம், த்ரிதம்; இவையும் வேறாதல்காண்க. இனிக்கலப் பெயர்:- தமிழ், குடுவை தாழி பானை, வடமொழி குண்டம் மந்திரி கடம்; இவையும் வேறாதல் காண்க. இனி, உறையுளின் பெயர்:- தமிழ் முழை, வீடு, வடமொழி குகர, திருதம்; இவையும் வேறாம் இனி, பூதப்பெயர்:- தமிழ் மண், நீர், தீ, கால், வான், வடமொழி பிருதிவி அப்பு தேயு வாயு, ஆகாயம், இவையும் வேறாம் பின்னர் விலங்கின் பெயர்:- தமிழ் ஆடு, மாடு, எருமை, நாய், பூனை, பன்றி, புலி, யானை, வடமொழி அஜம் மகிஷ சுநக மார்ஜ் ஜாலம் வராகம் வியாத்ரம் தந்தி; இவையும் வேறாயின பின் உறுப்பின்பெயர்:- தமிழ் தலை, முகம், கழுத்து, வடமொழி சிரஸ், வதநம், கண்டம்; இவையும் வேறாயின. இனி வினைப்பெயர்:- தமிழ் நட, இரு, போ, உண், தின், குடி, பார், கேள், தொல் வடமொழி சர், அஸ், கம், ஏ, அத், பக்ஷ், பஸ், ஸ்ளு, வத், இவையும் வேறாயின. வயும் வேறாயின. இங்ஙனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/388&oldid=1574814" இலிருந்து மீள்விக்கப்பட்டது