உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362

மறைமலையம் -8 8

பதக்கு முதலான முகத்தலளவைச் சொற்களுமாம். ஆகவே, இவ்வெண்ணுப்பெயர்களானும் பாஷை போற்றுமை கண்டறியலாம். பின்னர், இவ்வுணவுப்பொருளை வைத்துண் ணுங் கலங்கள் வேண்டப்படுமாதலின் அக்கலங்களின் பெயர் தோன்றாநிற்கும். அவை குடுவை தாழி, பானை, கலயம், அகப்பை முதலியனவாம். ஆக, இக்கலப்பெயரானும் பாஷை யினியைபு காணக்கிடக்கும். பின்னர், இவர் மழையினும் வேனிலினும் ஒதுக்கும் இடங்களின் பெயர் தோன்றும். அவை, குடில், முழை, வீடு முதலியனவாம். எனவே இவ்வுரையின் பெயரானும் பாஷாசம்பந்தம் அறியப்படும்; பின்னர் இவர்க்கு நாடோறும் பொருந்தவேண்டும் ஐம்பெரும் பூதங்களின் பெயர் தோன்றும். அவை, மண், நீர், தீ, கால், வான் என்பனவாம். இப்பூதப் பெயரானும் அவற்றினியைபுவிளங்கும். பின்னர், இவ் நாடொறுங்காணும் விலங்கினங்களின் பெயர் உண்டாகும். அவை, ஆடு, மாடு, எருமை, நாய், பூனை, பன்றி, புலி, யானை முதலியனவாம் என இவ்விலங்கின் பெயரானுஞ் சொல் லொற்றுமை புலப்படும்.

பின்னர், தம்முடம்பின்கண் உள்ள உள்ள உறுப்புக்களைக் குறிப்பிடவேண்டுதலின் அவற்றிற்குப் பெயரிடுவர். அவை, தலை, முகம், கழுத்து, மார்பு, கை, வயிறு, தொடை, கால் அடி முதலியனவும் கண், காது, மூக்கு, வாய், நா, விரல், உதிர், மயிர்

லியனவுமாம்; ஆகவே, இவ்வுறுப்புப் பெயரானும் மொழியொற்றுமை தேறப்படும். இனி, இவ்வாறெல்லாம் இவர் பொருள்கட்குப் பெயரமைக்குமாறு அறிந்தபின் தாமி னிகழ்த்தும் வினைகட்குப் பெயரிடுவர். அவை நட, இரு, போ, வா, உண், தின், குடி, பார், கேள், சொல் முதலியன வாம். ஆகையால், இவ்வினைப்பெயரானும் பாஷைகளினப்படு மாறு தெரியலாம். இவ்வாறெல்லாம் யாம் பகுத்துக்காட்டிய தொகுதிப்பெயர்கள் பத்தானும் இருவேறு பாஷைகள் ஒப்புமையுடையவாதல் காணப்படுமாயின். அவை யிரண்டும் முன்னொருகாலத்து ஒரு சொல்லாயிருந்து பின் வேறுபட்ட வாமென்பது நன்குபெறப்படும்; மற்று இப்பத்துவகைப் பெயர்களானும் அவை யிரண்டும் இயைபுடையவல்லவாதல் துணியப்படு மாயின். அவை யிரண்டும் பிற்காலத் தொன்றோ டொன்று பெரிதுமருவி வழங்குமாயினும் அதுபற்றி அவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/387&oldid=1574813" இலிருந்து மீள்விக்கப்பட்டது