உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

361

டர்ப்பாடுடையராய் இலேசிலே தங்கருத்துத் தெரிக்குங் கருவியுணர்ந்து சொற்சொல்லத் தொடங்கினார். அங்ஙனந் தொடங்குகின்றுழித் தமக்கு அவ்வநாகரிக நிலையினும் இன்றியமையாது வேண்டப்படும் பொருடெரிப்பதற்கே சொற்குறிதருதற்கு ஒருப்படுவாராதலால் அவ்வநாகரிக நிலையில் முதன்முதற் றோற்றமுற்றெழுந்த சொற்களானேதாம் பிற்காலத்தவற்றினை அடிப்படையாகக் கொண்டெழுந்த பாஷைகள் தம்முளினமுடையவாதல் உணரப்படும். அவ்வாறு அவ்வநாகரிகநிலையில் உற்பத்தியான சொற்கடாம் யாவையோ வெனிற் காட்டுதும். “அநாகரிக மக்கள் முதன் முதற் சொல்லு ரைப்பத் தொடங்கிய காலையில் பேசுகின்ற தம்மையும், தாய்மொழி அது முன்னின்று கேட்போரையும், தாம் பிறர் ஒருவரைச் சுட்டியே முன்னின்றாரொடு பேசவேண்டியி ருத்தலால் அங்ஙனம் பேசப்படுவோரையுங் குறிப்பிடுதற்குரிய சொற்களறிந்துரைத்தார். அவைதாம், நான், நாம் என்னுந் தன்மைப்பெயரும்; நீ நீர், என்னும் முன்னிலைப்பெயரும், அவன், அவள், அவர், அது, அவை என்னும் படர்க்கைப் பெயருமாம். ஆதலின், இவ்விடப்பெயர்கள் ஒப்புமையாற் பாஷைகள் தம்முள் இனமுடையவாதல் தெளியப்படும்.

பின்னர், அம்மக்கள் அங்ஙனமுரையாடுங்கால் இவரெமக்கு இன்ன கேளுரிமையுடையார்.

நுமக்கு

ன்னவுரிமை யுடையா ரென்று அறிவுறுத்துகின்ற சொற்களறிந்துரைப்ப. அவை, அம்மை, அப்பன், பிள்ளை, கணவன், மனைவி, அண்ணன், தம்பி, அக்கை, தங்கை முதலானவாம்; இம்மறைப் பெயர் களானும் பாஷைகள் இனமுடைமை தேறப்படும். பின்னர், தாம் உய்யும்பொருட்டு வேண்டப்படும் பொருட்பெயர் அறிந்து வழங்குவர். அவை காய், கனி, கிழங்கு, இலை, நெல், தினை, வரகு, நீர், பால், தேன் வரகு,நீர்,பால்,தேன் முதலியனவாம். முவ்வுணவுப்பொருட் பெயரானும் பாஷை ஒற்றுமை நன்கறியப்படும். பின்னர், இவ்வுணவுப்பொருள்களை இத்துணையென அளந்தறிதற்கு வேண்டப்படும் பெயர்களை அறிந்து சொல்வர். அவை, ஒன்று, இரண்டு, மூன்று முதலான எண்ணலவைச் சொற்களும், தோடி, பலம், விசை முதலான எடுத்தலளவைச் சொற்களும் சாண் அடி, முழம் முதலான நீட்டலளவைச் சொற்களும், ஆழாக்கு, உழக்கு, படி, குறுணி,

6

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/386&oldid=1574812" இலிருந்து மீள்விக்கப்பட்டது