உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360

மறைமலையம் -8 8

போற்றிப் பொதுவகையாலொத்து வழங்கும் ஒழுகலாற்றாற் செந்தமிழ் தன் பண்டைவழக்குச் சிதையா இளமைக்கோலத் தாடு வளமிகப் பொலிகின்றது. இனிப்பல்லாயிர வாண்டுகட்கு முன்னதான பண்டைக்காலத்தே பழந்தமிழ் வழங்கிய மக்கள் தந்நாடு துறந்து புறம்போந்து பல நாடுகளிற் சென்று வைகியனார்; வைகியபின், இக்காலத்திற்போல அஞ்ஞான்று இலேசிலே ஊர்ப்பயணம் போதற்குபகாரப்படும் நீராவி யந்திரங்களும் சமாசாரங்கள் போக்குதற்குதவியாகுந் தவால் நிலைகளும் பிறவுமில்லாமையால் தத்தமக்கேற்ற L பற்றியால் தமிழ்ச்சொற்களைத் திரித்து வழங்கினார்; இங்ஙனம் ஒருவரை யொருவரறியாமல் தத்தம் நாடுகளி லிருந்தவாறே வாழ்க்கை நிகழ்த்திவந்தமையால் பிற்காலத்தே அவர்பேசும் பாஷைகள் தமக்குள் இனமுடையன வல்லபோல் தோன்றுகின்றன; கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு முதலிய பாஷை களெல்லாம் இங்ஙனந் தமிழ் வழங்கிய தொன்மக்கள் வேறு பிரிந்து வேறிருந்து வாழ்ந்தமையா லுற்பத்தியான பழைய தமிழ்ச் சொற்றிரிவுகளேயாம்; வேறு அவை தனித்தனிப் பாஷைக ளல்லவென்று துணிக. இவ்வாறே வடநாடுகளினும் பண்டைக்காலத்தொன்றாயிருந்த ஆரிய மொழி யொன்று தானே இலத்தீன், கிரேக்கு, சமக்கிருதம், ஆக்கன், அம்பிரியன், ஆங்கிலோகாக்கன், பழையபிரிசியன், காதிரு முதலான பல்வேறு சொற்களாகப் பிளவுபட்டதென்க. இதனால், ஒருமொழியிற் பிறந்தன என்பதன்கருத்துப் பழைய நிலையில் ஒன்றாயிருந்த ஒரு பாஷைதானே புதுநிலையிற் பலவாறாகப் பிரிதலுறு வதாயிற்றென்பதும் அதனால் அவையொன்றோ டொன்று இனப்படுதலும் நனிவிளங்குதலின் ஒரு பாஷையிலிருந்து பிறிதோர் பாஷை பிறக்குமென்று

1

உண்மையுணராது வாதிடுவார் கூற்றுப்பொருந்தாமைகாண்க. இது நிற்க.

இனி, ஒரு சொல் மற்றொன்றோடினமாமென்பதனை யறியுமாறு காட்டுவாம். பிண்டொருநாள் மக்களெல்லாம் சொற்சொல்லுமாற்றியாது மிக்கதோர் அநாகரிக நிலையி லிருந்தார். அப்போது அவர் தங்கேளிரோடு செறியவிருந்து தங்கருத்தினை அவர்க்குப் புலப்படுத்தலெல்லாங் குறிகளாற் செய்து போதருவாராயினார். அங்ஙனம் பேர் தருங்கால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/385&oldid=1574811" இலிருந்து மீள்விக்கப்பட்டது