உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

359

ஒன்றினின்று பிறந்ததென் றுரைப்பாருரை பாஷா தத்துவ ஞான முடையரல்லாதார் கூறும் வழுவுரையாமாறும், தமிழிலிருந்து வடமொழியில் வழங்குஞ் சொல்லுற்பத்தி முறையுஞ் சிறிது விளக்குவாம்.

L

ஒரு பாஷை ஏனையதொன்றிற் பிறந்ததென்பார் கருத்துண்மை யாராயுமிடத்துப் பண்டொரு காலத்து ஒருமொழியினை வழங்கிய மக்கள் தாம் ஒருமித்து உறைந்த டம்விட்டுப் பெயர்ந்து பல்தேய நோக்கிச்சென்று ஆங்காங்கு வதிதருங்கால் தத்தமக்கியைந்தவாறு தஞ்சொல்லை வேறு படுத்து வழங்க, அவ்வழங்கல் வேறுபாட்டால் அவர் முன் பேசிய ஒரு சொற்றானே பிற்காலத்து வேறுவேறு சொற்களாய் நிலைபெறுவதாயிற்றென்னும் நியதி இனிது விளங்காநிற்கும். எமது செந்தமிழ் நாட்டின் கண்ணேயும் மதுரை நெல்வேலி முதலான பாண்டிநாட்டின் தமிழ்ச்சொல் வழக்கு ஒருவாறு நிலைபெறுகின்றது. செங்கற்பட்டு சென்னை முதலான தாண்டை நாட்டின் வழக்குப் பிறிதொருவாறாய் நடைபெறு கின்றது. கொழும்பு யாழ்ப்பாணம் முதலான ஈழநாட்டின் வழக்கு வேறொருவாறாய் நிலையுதலுறுகின்றது. இந்நாற்பெருந் தேயத்தார் தமக்குள்ளும் ஓர் ஊரார் சொல்வழங்குமுறை ஒன்றாம். மற்றோர் ஊரார் வழங்குமுறை மற்றொன்றாம். இவ் ஓரூராருள்ளும் ஒரு குடியிலுள்ளார் ஒருவகையானும் பிறிதொரு குடியிலுள்ளார் பிறிதொரு வகையானுந் தத்தமக் கியைந்தவாறு சொற்களை வழங்குகின்றார். இங்ஙனம் ஒரு குடியிலுள்ளார் மற்றோர் குடியிலுள்ளாரோடும், ஓரூரிலுள் ளார் மற்றோர் ஊரிலுள்ளாரோடும், ஒரு நாட்டிலுள்ளார் பிறிதொரு நாட்டிலுள்ளாரோடும் உறவுரிமையானும், உழவுரிமையானும், வாணிக வுரிமையானும் அளவளாவு தலின்றித் தனித்தனியே யிருந்து காலங்கழிக்க நேருமாயின், இவர் தத்தம் விசேட வேறுபாட்டுடன் வழங்குஞ் சொற்கள் நெடுங்காலங் கழிந்த பின்னை வேறுவேறு பாஷைகளாய்க் காணப்படுமென்பது தேற்றமாம். அதிட்டவசத்தாற் றமிழ் அங்ஙனந் திரிவுபடாமை அதனை வழங்கும் மக்களெல்லாரும், நீராவியந்திர சகாயத்தானும் கடிதப்போக்குவரவானும் பிறவாற்றானும் ஒருவரோடொருவர் விராயத் தத்தமக்குரிய விசேட வழக்குவேறுபாடு தோன்றாவண்ணம் அதனைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/384&oldid=1574810" இலிருந்து மீள்விக்கப்பட்டது