உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358

மறைமலையம் - 8

ரென்றலுங் கொள்ளற்பாலனவல்ல. இதனாற் பரிமேலழகியார் நுட்பவுரையாசிரியரல்லரெனவாதல். அவருரையெல்லாம்

புரைபடுவன வென்றாதல்கோடல் எம்முடைய கருத்தா மாறில்லை. பெரும்பான்மையாற் சொற்பொருட்டிட்ப நுட்பமுடைய விழுமியவுரை மற்றதுமா மென்பது அவ்வுரை யெழுதிய பரிமேலழகியார் எம்மனோரால் விழுத்தப்பட்டு அறிவுரை நற்பெரும் புலவரோமென்பதும் எமக்குத் துணிபு. ஆயினும், ஒரோவிடங்களில் ஆசிரியர் கருத்தறியாது உரையிட்டார்; என்னை நூலுரை போத்தாசிரியர் மூவரும், முக்குணவசத்தான் முறைமறந் துரைத்தலியல்பாகலின், அவர் இங்ஙனம் ஆசிரியர் கருத்தறியா துரைத்தனவெல்லாம் சமயம் வாய்க்கும் போழ்து சிறிதுசிறிதுகாடலறுத்து உண்மைப் பொருள் நிலையிடுங்கடப்பாடுடையோம். இங்ஙனம் இருவ ராசிரியர் சீறுகொண்டோர்க்கும் பொருள்களுள் ஒருதலை துணிதலென்னு மதம்பற்றியிதனை யிழுக்கவொரு...

இனி, இவ்வாராய்ச்சியால் ‘குடம்பை தனித்தொழிய’ என்னுந்திருவாக்குப் பரிமேலழகியார் கூறுமுரை ஒருவாற் றானும் பொருந்துமாறில்லை யென்பதூஉம், அதற்குப் பண்டை யுரையாசிரியர்கூறிய கூடுதலளித்தொழிந்துகிடப்ப அதனுள் முன்வைகிய பறவை பறந்துபோனவாறு போல் என்னுமுரையே தொன்னூலாசிரியர் வழக்கறிந்த மெய்யுரையாமென்பதூஉம், நிகரில்லா பண்டை யுரையாசிரியரான நச்சினார்க்கினியர் அவரோ சீடருகிருந்து கேட்டாராயின் அதனை அவர் மருமொழியாராகலான் அவர் அவரோடொரு காலத்தவர்க் கொப்பதூஉம் இனிதெடுத்து விளக்கப்பட்ட

ன.

தமிழ் வடமொழியினின்று பிறந்ததாமா?

(முதலிதழ்த்தொடர்ச்சி)

நூலிற் "பயிற்சி செய்யப்படும் எந்தப் பாஷையும் பிறிதொரு பாஷைக்குத்தாயகமாதல் ஒருவாற்றானுமில்லை” எனத் தந்துணிபுநிலையிட்டார். இது கிடக்க. இனி, ஒரு பாஷை பிறிதொன்றிலிருந்து பிறந்ததென்றுரைப்பார். உண்மைக் கருத்தும், ஒன்று ஒன்றற்கு இனமாமென்பதை யறியுமாறும் வடமொழியிலிருந்து சில சொற்கள் தமிழிலுந் தமிழிலிருந்து சில சொற்கள் வடமொழியிலும் வழங்குதல்பற்றி ஒன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/383&oldid=1574809" இலிருந்து மீள்விக்கப்பட்டது