உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382

மறைமலையம் 8 – 8

லோடு மற்றைய கிருத்தியங்களையுமுடையவர் விவிதீஷு எனவும் அறநூல் முதலியவற்றில் வியாக்கியானம் பண்ணுதலோடு மற்றைய கிருத்தியங்களையும் உடையவர் வித்துவான் எனவுங் கொள்க. இங்ஙனம் எல்லாச்சமயத் தார்க்கும் ஒத்ததுணிபாக விசேட குருத்துவம் உண்டென்று நாயனார் நவின்றருளியவிF சிவாகமங்களிற் றலைமைபெற்ற காமிகாமத்தில் நான்காம் வருணத்து விரத்தருக்கே குருத்துவம் சாதித்த விசேடவிதி ஒத்துச் சாதுர்வருணத்தின் மேலதாகவும் அதனைத் தமதுமதி நுட்பத்தால் ஆராயாது நான்காம் வருணத்து விரத்தருக்குக் குருத்துவம் இல்லையென்றும் கிரகஸ்தர்க்கே குருத்துவம் உண்டென்றும் சிலர்கூறுவா ராயினர். அவர் காமிகாகம சுலோகமொழி பெயர்ப்பாகச் சைவ சமயநெறி நூலுடையார்- யார்- "சூத்திரனுந் சூத்திரனுந் தேசிகனாவான் மரணாந்தந் துறவி, சாத்திரத்தின் மூன்றுமுணர்ந்தால்” என்றுகூறிய திருக்குறளும் நான்காம் வருணத்திலே துறவறத்தி னராய் திருநாவுக்கரசு நாயனார் சைவசமய பரமாசாரிய ராகவும் மெய்கண்டதேவர் திருக் கைலாய சந்தான பரம குரவராகவும் எழுந்தருளி யிருந்தமையும் நான்காம் வருணத்து விரத்தருக்கே விசேட குருத்துவம் உண்டென் பதற்குச் சான்றாதலை சித்த சமாதானத்தோடு உணர்ந்து தெளிவாரா. நான்காம்வருணத்துக் கிரகஸ்தருக்கும் குருத் துவம் உண்டென்பது ஆசரணை முதலியவற்றால் கொள்ளற் பாற்று. இன்னும் இதன் விரிவெல்லாம் ஆசிரியர் சிவஞான யோகிகள் செய்தருளிய சிவஞானபோத திராவிட மாக பாடியத்திற் காண்க.ஈண்டுரைப்பிற் பெருகும்.

இங்ஙனந் துறவறத்தார் பெருமைகூறவே இல்லறத்தார் இத்துணைச்சிறப்பிலராந்தன்மை கூறியதூஉமாயிற்று.

வைராக்கியதீபம்

வாழ்க்கைச்சிறுமை தூற்றினாரதுதெரியார்க்

-

நிறந்தருந் தெய்வப்புலமை வள்ளுவனார் நீத்தவர் பெருமை நூன்முகப்பாற் - சிறந்திடவமைத்தாங்கது கொடிய கறந்தவாதி யற்றினவெனிலுங் கோடியதிகமாமென மனமறாது-துறந்து ளோனையும் பட்டினத்தெமதடிகள் தொகுத்த கட்டுரை திகழ்த்திடுமே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/407&oldid=1574833" இலிருந்து மீள்விக்கப்பட்டது