உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

3-வது, நீத்தார்பெருமை

எல்லார்பெருமையினுந்

மிக்கதாதல்.

383

துறந்தார்பெருமையே

து

தத்தம் வருணத்திற்கும் ஆச்சிரமத்திற்கும் உரிய ஒழுக்கங்களிலே வழுவாதொழுக அறம்வளரும், அறம்வளரப் பாவந்தேயும், பாவந்தேய அறியாமை நீங்கும், அறியாமைநீங்கச் சித்தம் சுத்தியாம், சித்தம் சுத்தமாக இது நித்தியம் அநித்தியமென்னும் பகுத்துணர்வும் அநித்தியமாகிய இம்மை மறுமை யின்பங்களிலே வெறுப்பும் பிறவித் துன்பங்களுந் தோன்றும், அவைதோன்ற நித்தியமாகிய முத்தியின்கண் ஆசை யுண்டாம். அஃதுண்டாகப் பிறவிக்குக்காரணமாகிய வீண் முயற்சிகளெல்லாநீங்கி முத்திக்குக்காரணமாகிய யோக முயற்சி யுண்டாகும், அஃதுண்டாகமெய்யுணர்வுபிறந்து புறப் பற்றாகிய எனதென்பதும் அகப்பற்றாகிய யானென்பதும் விடும். ஆதலால் அகங்காரங்களாகிய வ்விரண்டு பற்றையும்

மமகார

இம்முறையே துறந்தாரது பருமையை மேம்பட்ட ாருள்கள் பலவற்றுள்ளும் துவே மேற்பட்டதென ஒன்றையொன் றொவ்வாத சமயநூலாரனைவரும் நிச்சயமாக விரும்புவர்.

மமகார அகங்காரங்களாகிய இருவகைப்பற்றினை விட்டாரது பெருமையை இவ்வளவென்று எண்ணினாற் கூறி அறிதலுறின் அளவுபடாமையால் இவ்வுலகத்துப் பிறந்திறந்த வரை எண்ணி இத்துணையினரென அறியலுற்றாற்போலும்.

ஆக்கினாசக்கிரத்தைச்செலுத்தி உலகமுழுதும் ஆண்ட அரசர் முதலாயினார் பெருமையினும் பிறப்பு வீடென்னும் இரண்டினது துன்பவின்பப்பகுதிகளை ஆராய்ந்தழிந்து அப் பிறப்பினை யறுத்தற்கு இப்பிறப்பின்கண்ணே துறவறத்தைப் பூண்டவரது பெருமையே உலகின்கண் உயர்ந்தது.

ஐம்பொறியடக்கல் துறந்தாரது பெருமைக்கு ஏதுவாதல்

அறிவென்னும் அங்குசத்தினால் பொறிகளாகியயானை ஐந்தனையும் தத்தம்புலங்கண்மேற் செல்லாமற்காப்பவன் எல்லாநிலத்தினும் மிக்கதென்று சொல்லப்படும் வீட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/408&oldid=1574834" இலிருந்து மீள்விக்கப்பட்டது