உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384

மறைமலையம் - 8 –

நிலத்திற்சென்று முளைக்கும் லித்தாதலன்றி இவ்வுலகத்தின் கண்ணே பிறந்திறந்து வரும் மகன் அல்லன்.

விடயங்களிற் செல்கின்ற ஆசையைந்தனையும் அடக்கி னானது வலிமைக்கு அகன்றவிண்ணுலகத்துள்ள தேவர்கட்குத் தலைவனாய் ஐந்தவாவினையும் அவியாது வானப் பிரஸ்த மாகிய துறவறத்தினின்று கௌதமமுனிவரது சாப மெய்திய இந்திரனே அமையுஞ் சான்றாகும்.

யோகமுயற்சி துறந்தார் பெருமைக்கு ஏதுவாதல் மாநுடருள்ளே

ஒத்தபிறப்பினராகிய

மனம்

வேண்டியவாறே அம்மனத்தை ஐம்பொறிவழிகளால் ஐம்புலன் களிற் செலுத்தலும், விரும்புதலும், வெகுளுதலும் முதலியன வாகிய செய்தற்கு எளியவற்றைச்செய்யாது, இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்னும் செய்தற்கு அரியவற்றைச் செய்வார் பெரியர்; அவ்வெளியவற்றைச்செய்து அரியவற்றைச்

செய்யமாட்டாதார் சிறியர்.

இயமம்

இயமமாவது, கொல்லாமை, சத்தியம், அத்தேயம், பிரமசரியம், தயை, ஆர்ச்சவம், க்ஷமை, திருதி, மிதாசாரம், கவுசம் எனப்பத்துவகைப்படும்.

அவற்றுள் (1.) கொல்லாமையாவது வேள்வியாதிகளிற் செய்யுங் கொலை தவிர மற்றையுயிர்களைக் கொலைபுரிய மனத்தும் நினையாமையாம். உடல் பொறிகரண முதலியவற்றை நானென்று மதித்தலாகிய கொலைசெய்யாது சய்யாது உயிரின் உண்மையறிவதும் கொல்லாமையாம்.

(2) சத்தியமாவது கண்ணாலும் காதாலும் கண்டும் கேட்டும் உள்ளவைகளைக் கூறுதலாம்.

பிறந்திறக்கும் பொய்த்தெய்வங்களை மதியாது நித்தியமாகிய முதல்வனையே மெய்த்தெய்வமென்று நம்புவதுஞ் சத்தியமாம்.

(3) அத்தேயமாவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/409&oldid=1574835" இலிருந்து மீள்விக்கப்பட்டது