உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388

மறைமலையம் -8 8

இலக்கியவாராய்ச்சி

இலக்கியமாவது யாது? இலக்கியம் என்னுந் சொல்லின் பொருள் யாது? உற்பத்தி யாது? இலக்கியம் எனப்படுவன யாவை? நீதி முறைகளை உணர்த்தும் வாக்குண்டாம் நன்னெறி முதலியனவும் இலக்கியம் எனப்படுமா? தோத்திரரூபமாயுள்ள தேவாரம் முதலியனவும் இலக்கியம் எனப்படுமா? திராவிடப் பிரகாசிகைகாரர் அக்கம் பக்கத்திலே “திருமுறையிலக்கியம், சங்கவிலக்கியம்" முதலியனவாகப் பலதிறப்படும் என்கிறார். தொல்காப்பியப் பொருளதிகாரத்திலே “அறுவ கைப்பட்ட பார்ப்பனப்பக்கமும்” என்பதனுரையிலே நச்சினார்க்கினியார் ராமாயணமும் பாரதமும் போல்வன இலக்கியம்” என்ற

66

தென்னை?

6

ரு

பெரியபுராணம் என்னும் பெயர்க்காரணம் யாது? தொண்டர்கள் மற்று யாவரினும் மிக்காரல்லரோ! அதுபற்றி அவரைப் பெரியர் என வழங்குதல் பொருந்தாதா? பெரியர் + புராணம் என்பது "சிலவிகாரமாமுயர்திணை என்னும் நன்னூல் விதிப்படி ‘பெரியபுராணம்' என்பதை விளக்கிநின்றது என்று கொள்ளுதற்குத் தடையாது? திராவிடப் பிரகாசிகை காரர் 114-ம் பக்கத்திலே ‘இது பெரியபுராண மெனவும்' திருத்தொண்டர் புராணமெனவும் வழங்கப்படும். வ்வி திருனாமங்களும் இதற்கு ஆசிரியரேயிட்டனவென்பது “எடுக்கு மாக்கதை எனவும், “இங்கிதநாமங்கூறின் - செங்கதிரவன் போனீக்குந் திருத் தொண்டர் புராண மென்பாம்” எனவும் போந்தபாயிரத்தாலறிக. பெரியபுராணம் பெருமையை யறிவுறுக்கும்புராணம்” என்கின்றார். பெரியபுராணம் என்பதும் ஆசிரியரிட்ட பெயராயின், ‘இங்கிதனாமங்கூறின்' என்னுஞ் செய்யுளிலே சேர்த்துக் கிளந்து கூறாததென்னையோ! ஒரு நூலுக்கு ஒருபெயரன்றி இருபெயரிடுவதும் ஆசிரியர்க்கு வழக்காகுமா? “எடுக்குமாக் கதை” என்பதனாற் பெரியபுராணம் என்பதும் அவரிட்ட நாமமெனக்கொள்ளுதல் பொருந்துமா? சேதுபுராண காரர் அவையடக்கத்திலே “திகழுமாக்கதை செய்திடுஞ் செய்யுடான் பகர்விருத்தமதாகும்" என்றார். பாரதகாரரும் குருகுலச்சருக் கத்திலே “அங்கண்மாநிலத்தரசர் பல்கோடி யவ்வரசர் - தங்கண்மாக்கதை யானறியளவையிற் சமைக்கேன்” என்றார். இவ்விருநூல்களிலும் ‘மாக்கதை’ என

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/413&oldid=1574839" இலிருந்து மீள்விக்கப்பட்டது