உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

389

ஆசிரியர்கள் கூறுதலால் ‘பெரியபுராணம்' என இவைகட்கும் வழங்கப்படுமா? 'மாக்கதை' என்பது எங்ஙனம் விரித்துப் பொருள் சொல்லப்படும்.

66

""

அவர்

மேலுந் திராவிடப்பிரகாசிகை 121ம் பக்கத்திலே திருத்தொண்டத்தொகையுள் அத்திருத்தொண்டத்தொகை திருவாய்மலர்ந்தருளிய சமயாசாரியரான திருநாவலூரர் பெருமானாரும், அவர் தந்தைதாயாராகிய சடையனார் சைஞானியார் என்பாரும் அடங்காமையின் தந்திருநாமபாராயணமு முடனெய்தல்வேண்டிச் சிவஞான யோகிகள் திருத்தொண்டர் திருநாமக்கோவை என்று அங்ஙனம் வேறுநூல் அருளிச் செய்தாரென்க என்றார். திருநாவலூரர்பெருமானார், சடையனார், இசைஞானியார் என்னும் மூவர் திருநாமங்களும் பாராயணஞ் செய்தற் கெண்ணித் திருத்தொண்டர் திருநாமக்கோவை செய்ததாயின்; சிவஞானசுவாமிகள் பிரபந்தத்திரட்டின் முகத்திலே எழுதப் பட்ட சிவஞானயோகிகள் வரலாற்றிலே 19ம் பக்கத்திலே "நித்தநியமமந்திரமாகத் திருத்தொண்டர் திருநாமத்தை ஓதியுய்யவேண்டுவோர் கருத்துத் தடையுறாவண்ணந் திருத்தொண்டர் திருநாமக்கோவை” செய்தருளினார் என்றார் கருத்துத் தடையுறாதோ?

129-ம் பக்கத்திலே திருக்குறள் வரலாற்றிலே “இதுகுறள் வண்பாவா லருளிச்செய்யப்பட்டமையின், திருக்குற என்றாயிற்று” என்றார். குறள்வெண்பாவாற் செய்யப்படுதல் “திரு” என்னும் விசேடணம் பெறுதற்குங் காரணமாகுமா?

190-ம் பக்கத்திலே “எடுத்துக்காட்டென்னு முவமையினை வடநூலார் நிதரிசனாலங்காரமென்றுரைப்பார்" என்றார். குவலயானந்தகாரர் திருஷ்டாந்தாலங்காரத்தை எடுத்து க் காட்டுவமையணி எனவும் நிதரிசனாலங்காரத்தைக் காட்சியணி எனவும் மொழிபெயர்த்தவாறென்னோ? இரண்டும் ஒன்றாயின் வெவ்வேறு கூறுவாரா?

173-ம் பக்கத்திலே இரகுவமிசவரலாற்றிலே “இரகுதிக்கு விசயங்கொண்ட வரலாறும், அவற்கு மகனாயுதித்த அயன் படையோடெழுந்துபோய்ப் பஃறேயமன்னர் திறைகொண்டு” எனவும், “குசனயோத்தியெய்தியவரலாறும், அவன் நாகராஜன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/414&oldid=1574840" இலிருந்து மீள்விக்கப்பட்டது