உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390

மறைமலையம் லயம் – 8

றந்த வாகுவலயங்கொண்டு நாககன்னியை மணந்து, முடிசூடி யுலகாண்ட வரலாறும் எனவுங்கூறினார். பஃறேயமன்னர் திறைகொண்டவன் இரகுவா? அயனா? இரகுமிசத்திற்கூறிய முடிசூட்டுவரலாறு அதிதியைக் குறித்ததா? குகனைக் குறித்ததா? திறைகொண்டவன் அயன் எனவும், முடிசூட்டு படலம் குசனைக்குறித்தது எனவுங் கூறுதற்குப் பிரமாணங்கள்

யாவை?

6

179-ம் பக்கத்திலே இராமாயண வரலாற்றிலே “ஆண்டு வாலியைக்கொன்று சுக்கிரீவனட்பெய்தி” எனவும் “இதன் உத்தரகாண்டம் ஒட்டக்கூத்தராற் றமிழின் மொழிபெயர்த்துப் பாடப்பட்டது. இது இராமச்சந்திரன் முடிசூடிப் பரிவேள்வி யாற்றியதும், பிறவும்கூறும்” எனவுங் கூறினார். ஸ்ரீராமன் சுக்கிரீவனட்பெய்தியபின் வாலியைக்கொன்றானா? நட்பெய்த முன்கொன்றானா? இராமாயணம் எங்ஙனம் கூறும்? ஸ்ரீ ராமனுடைய முடிசூட்டுவரலாறு யுத்தகாண்டத்திலே ல திருவபிடேகப்படலத்திலே கம்பராலே பாடப்பட்டிருக்கின்றது. உத்தரகாண்டத்திலும் ஸ்ரீராமனுடைய முடிசூட்டுக்கூறப் பட்டுள்ளதோ? ஒட்டக்கூத்தர்பாடிய உத்தரகாண்டம் இலங்கையழித்தன் முதலிய பூர்வகதையும் பிறவுங் கூறுகின்றது.

சுன்னாகம்

இங்ஙனம்

அ.குமாரசுவாமிப்பிள்ளை

வடமொழியிலுள்ள தமிழ்ச்சொற்காரணம்

அரசன்

பார்த்திபன்

என்னும்

இ து பொருளில்வரும். பிருதிவிசம்பந்தம் பார்த்திபமாகலின் அதனையுடையான் பார்த்திபன் என்க. புவியென்பது பூமியாகலின் அதுபுடவி புருடவி பிருடவி பிருதிவி யெனவாயிற்று. பூமியும் புவியின் திரிபே. வகரமகர மாகும். பூவல் (கிணறு, நீர்) புவலம் புவனம் புவனி புவி பூமி பூ எனவாம்.

புவனம் - நீர், பூமி உலகம் இம்முறைமையிற் பொருட் பேறாம்.நீராற் சூழப்பட்டது என்பது பொருள். புவலம் புவனம் பொருள்.புவலம் லகரம் னகரமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/415&oldid=1574841" இலிருந்து மீள்விக்கப்பட்டது